India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரணம் இன்றி மனிதர்களை வெறுக்கும் போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத பதட்டத்தை ஏற்படுத்துகிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது. வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி பயணிக்க முடியும்.
ஏப்ரல் – 10 | பங்குனி – 28
▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM, 3:00 PM – 4:00 PM
▶கெளரி நேரம்: 10:30 AM – 11:30 AM,
6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 PM – 12:00 PM
▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶ திதி – துவிதியை
ஹேமமாலினி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்., தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தை குறைக்கும் வகையிலான பேச்சுகளில் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக. இது குறித்து பேசிய ரந்தீப் சுர்ஜேவாலா, “நான் பேசியதை வெட்டி ஒட்டியுள்ளார்கள், அவதூறாக எதையும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.
எதிரணி வீரரை தாக்கியதால் ரொனால்டோவுக்கு ரெட் கார்டு காட்டப்பட்டது. சவுதி அரேபியாவில் சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அல்-ஹிலாலிடம் தோற்றது. இதனால், ரொனால்டோ எதி ணி வீரர் அலி அல்புலாஹியை இடித்து கீழே தள்ளினார். இதனால் நடுவர் அவருக்கு ரெட் கார்டு அளித்தார். ரொனால்டோ இதுவரை 12 முறை ரெட் கார்டு பெற்றுள்ளார்.
➤ பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
➤ சில வேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
➤ யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
➤ நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.
➤ நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.
கொடுங்கோல் ஆட்சியை நோக்கி இந்தியா நகர்வதாக வயநாடு தொகுதி சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இதை ஏற்க மறுக்கிறது. இல்லை என்றால் ராகுல் இங்கு போட்டியிட வேண்டிய தேவை இருக்காது எனக் கூறினார். மேலும், தேசத்தில் பாசிசம் உச்சத்தை எட்டியுள்ளதால், அதனை அனைவரும் ஒன்றினைந்து முறியடிக்க வேண்டும் என்றார். ராகுலை எதிர்த்து போட்டியிடும் ஆனி ராஜா, சிபிஎம் மூத்த தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆவார்.
திராவிட இயக்கத்தின் முன்னோடி ஆர்.எம்.வீரப்பன் மறைவு அதிர்ச்சியை அளிப்பதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை என அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. சத்யா மூவிஸைப் போல ஆர்.எம். வீரப்பனின் நினைவுகள் என்றும் நினைவில் இருக்கும் என்றார். ஆர்.எம். வீரப்பன் சத்யா மூவிஸை உருவாக்கி மிகவும் திறம்பட நடத்தி வந்தார்.
➤1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னராக முடி சூடினார்.
➤1912 – டைட்டானிக் கப்பல் தனது கடைசி பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறைமுகத்தில் ஆரம்பித்தது.
➤1985 – யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
➤ 2006 – மீரட் நகரில் வணிகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் உயிரிழந்தனர்.
➤ 2016 – கொல்லம் கோவில் விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி
திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏக்கள், அமைச்சா்கள் செல்லும் வாகனங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்வதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் வாகனங்களை அதிகாரிகள் சோதனையிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து, திமுகதான் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்ததாகவும் விமர்சித்தார்.
சிவப்பணு உற்பத்திக்கு பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். மோர், பனங்கற்கண்டு, வெங்காயம், மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும். சுண்டைக்காயை உணவில் சேர்த்தால் நாக்குப்பூச்சித் தொல்லை குறையும். சர்க்கரை வள்ளி கிழங்கு உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
Sorry, no posts matched your criteria.