India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆளுநர் மாளிகை சார்பாக காவி வண்ணத்தில் திருவள்ளுவர் புகைப்படம் வெளியானதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி, சாதி, மதம் சார்ந்து புகைப்படம் வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘திருவள்ளுவர் விழா’ என்ற பெயரில் ஆளுநர் மாளிகை காவி வண்ணத்தில் அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது.
ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்த்திசையில் வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். பச்சை என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மணி, முனுசாமி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
*மேஷம் – போட்டி உண்டாகும்
*ரிஷபம் – செலவு அதிகரிக்கும்
*மிதுனம் – அமைதி ஏற்படும்
*கடகம் – சிந்தனை மேலோங்கும்
*சிம்மம் – இனிமையான நாள்
*கன்னி – நன்மை உண்டாகும்
*துலாம் – சோதனை ஏற்படும்
*விருச்சிகம் – ஆக்கப்பூர்வமான நாள்
*தனுசு – சாதனை படைக்க வாய்ப்பு
*மகரம் – பேராசையை தவிர்க்கவும் *கும்பம் – நஷ்டமடைவீர்கள் *மீனம் – சாந்தம் சாதகம்
சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 4’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், சுந்தர்.சி அடுத்ததாக ‘கலகலப்பு 3’ படத்தை இயக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் போலி திராவிட மாடல் அரசு நடப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோயில் பராமரிப்பின்மை, மோசமான சாலைகள் தான் இந்த அரசின் சாதனைகள் என்று குற்றம் சாட்டிய அவர், கடந்த திமுக-காங்கிரஸ் ஆட்சியின் சீரழிவை சரி செய்யவே பாஜகவுக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டதாக கூறினார். மோடியின் 10 ஆண்டு கால ஆட்சி டிரெய்லர் என்றும், இனிமேல் தான் மெயின் பிக்சர் வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், பாய்லர் வெடித்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 56 பணியாளர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் இருந்த பாய்லர் வெடித்தபோது, 3 கி.மீ., சுற்றளவுக்கு சத்தம் கேட்டதுடன், கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து சிதறியதாக மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த மாதம் பீர் விற்பனை 26.55% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், காஞ்சிபுரம், சேலம், திருப்பூர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி கூறும்போது, கோடைகாலத்தில் தடையின்றி பீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். இதனிடையே, இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுவுக்கான மவுசு குறைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். அங்கும் இடமில்லாமல் பலர் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில், நாளை காலை வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ஷாருக்கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். Heat stroke காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக்கான், கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை குணமடைந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, சென்னையில் நடக்கும் இறுதி போட்டியை காண அவர் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹரியானாவில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2009இல் காங்கிரஸ்10 தொகுதிகளில் 9இல் வென்றது. ஆனால், 2014 மற்றும் 2019 தேர்தலில் 7 இடங்களில் பாஜக வென்றது. குறிப்பாக, பாஜக 58% வாக்குகளை பெற்றது. அம்மாநில அரசியல் வரலாற்றில் எந்த கட்சியும் பெறாத வாக்குகளை பெற்ற பாஜக, இந்த முறை வெல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை மறுநாள் 10 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.