News April 9, 2024

துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

image

அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என இபிஎஸ் பேசியுள்ளார். தேனியில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய அவர், முல்லை பெரியாறு அணை உரிமையை திமுக கிடப்பில் போட்டுள்ளது. ஆனால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக சட்டப்போராட்டம் நடத்தியது என்றார். மேலும், I.N.D.I.A கூட்டணி என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாக விமர்சித்துள்ளார்.

News April 9, 2024

தக்காளி விலை தாறுமாறாக எகிறுகிறது

image

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன. இதனால், தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையான பாலக்கோடு சந்தைக்கு நாள்தோறும் 100 டன் தக்காளி வந்த சூழலில், அது தற்போது வெறும் 3 டன்னாக குறைந்துள்ளது. சில மாதங்களாக கிலோ ₹10, ₹20 என விற்பனையான தக்காளி தற்போது ₹50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி விலை மீண்டும் உயருமோ என்ற அச்சத்தில் இல்லத்தரசிகள் உள்ளனர்.

News April 9, 2024

450 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

image

தமிழ்நாடு, உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்பட 21 மாநிலங்களில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 102 தொகுதிகளுக்கான தேர்தலில் 1,618 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 450 வேட்பாளர்கள் (28%) கோடீஸ்வரர்கள் என பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 252 வேட்பாளர்கள் (16%) மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 9, 2024

IPL: பஞ்சாப் அணிக்கு 183 ரன்கள் இலக்கு

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 182/9 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4, ஹர்ஷல் படேல் 2, சாம் கரண் 2, ரபாடா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து PBKS அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

பாதம் தாங்கி பழனிசாமி என விமர்சித்த உதயநிதி

image

பாதம் தாங்கி பழனிசாமி என்ற பெயர் தான் எடப்பாடி பழனிசாமிக்கு சரியாக இருக்கும் என உதயநிதி கிண்டலடித்துள்ளார். சேலம் எடப்பாடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தன்னை முதலமைச்சராக மாற்றியவரையே சிறைக்கு அனுப்பிவிட்டு, யார் அந்த சசிகலா என கேள்வி கேட்டவர்தான் இபிஎஸ் என விமர்சித்தார். மேலும், மதுரை எய்ம்ஸ் பற்றி மத்திய அரசிடம் கேள்வி கேட்டால் இபிஎஸ்ஸுக்கு கோபம் வருவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

News April 9, 2024

IPL: தோனியின் புதிய சாதனை

image

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி புதிய சாதனையை படைத்திருக்கிறார். இதுவரை மொத்தம் 28 ஐபிஎல் போட்டிகளில் அணியை வெற்றிப் பாதைக்கு தோனி அழைத்துச் சென்றிருக்கிறார். அதாவது, கடைசி பந்து வரை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார். இந்த சாதனையின் இரண்டாவது இடத்தில் 27 போட்டிகளுடன் ஜடேஜா இருக்கிறார். 23 போட்டிகளுடன் தினேஷ் கார்த்திக் மூன்றாம் இடம் பிடிக்கிறார்.

News April 9, 2024

கூத்தாண்டவர் கோயில் திருவிழா தொடங்கியது

image

கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை (18 நாள்கள்) இத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவிற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான திருநங்கைகள் கூவாகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

News April 9, 2024

எந்த முகத்துடன் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்?

image

தமிழகத்திற்கு எதையுமே செய்யாத பிரதமர் மோடி, எந்த முகத்துடன் தமிழகத்திற்கு வருகிறார் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பிரசாரத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு மோடி தொல்லை கொடுப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், தேர்தலுக்குப் பின் வரவுள்ள நாட்டின் புதிய பிரதமர் தற்போதை பிரதமர் போல இல்லாமல், தமிழக மக்கள் மீது பாசம் கொண்டவராக இருப்பார் என அவர் உறுதி அளித்தார்.

News April 9, 2024

நாளை மாலை இறுதிச்சடங்கு

image

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (98) இன்று காலமானார். இவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும், மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 9, 2024

BREAKING: ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான்

image

தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை 11ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறையாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிக் கல்லூரிகள் அன்றைய தினம் இயங்காது.

error: Content is protected !!