India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (98) இன்று காலமானார். இவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும், மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை 11ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறையாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிக் கல்லூரிகள் அன்றைய தினம் இயங்காது.
சினிமாத்துறையில் பல ஆண்டுகளாக நீடித்துவந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது. மிக நெருக்கமாக இருந்துவந்த நடிகர்கள் விஷ்ணு விஷாலுக்கும் சூரிக்கும் இடையே நிலம் வாங்கிக் கொடுப்பது தொடர்பான பிரச்னை எழுந்தது. விஷ்ணு விஷாலும் அவரது தந்தையும் தன்னை ஏமாற்றிவிட்டதாக சூரி 2020ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், அவர்கள் மூவரும் இணைந்து தற்போது ஃபோட்டோ வெளியிட்டுள்ளனர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் புவிசார் அரசியலில் இந்தியா முக்கிய இடத்தை வகிக்கும் என்று ஐரோப்பிய நாடாளுமன்ற கொள்கை நிபுணர் ஆஞ்சலோஸ் டெலிவோரியஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “சீனாவின் வளர்ச்சி விகிதத்தை இந்தியா குறுகிய காலத்தில் விஞ்சிவிட்டது. 2026 இல் சீனாவின் ஜிடிபி 4.6%-ஐ எட்டும்போது, இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
ஒரு குழந்தைக்கு திருமணம் செய்துவைக்கவே பெற்றோர்கள் திண்டாடும் நிலையில், ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சுர்ஜராம் கோதாரா என்ற நபர் தனது பேரன்கள் 12 பேர், பேத்திகள் 5 பேர் என 15 பேரின் திருமணத்தை 2 நாட்களில் முடித்து வைத்துள்ளார். அனைவருக்கும் 2 நாள்களில் திருமணம் நடந்ததால் செலவும் குறைந்துள்ளது.
புதுக்கோட்டையில் எச்சரிக்கை இல்லாத வேகத்தடையில் தடுக்கி விழுந்து காவல் ஆய்வாளர் ப்ரியா உயிரிழந்திருக்கிறார். புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் வேகத் தடையில் வெள்ளை நிறம் பூசப்படாமலும், எச்சரிக்கை பலகை வைக்கப்படாமலும் இருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் சென்ற பிரியா, வேகத்தடையில் நேற்று தவறி விழுந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டிடிவி தினகரன் அடிக்கடி நிறம் மாறக்கூடியவர் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேனி பிரசாரத்தில் பேசிய அவர், நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி தான் பாஜக எனக் கூறிய தினகரனே தற்போது அந்தக் கூட்டணியில் இருப்பதாக விமர்சித்தார். மேலும் தனது சுயநலத்திற்காக கட்சி மாறிச் சென்றவர்களுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.
காவிரியில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்பத் தேவையில்லை, தமிழ்நாடு காங்கிரஸ் சொல்வதைக் கேளுங்கள். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு எதையும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.
தேர்தல் முடிந்ததும் திமுக வாக்குறுதிகளை மறந்துவிடும் என பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த அவர், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாக தெரிவித்தார். ஆனால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இந்தத் தேர்தலிலும் அதே வாக்குறுதியை அளிப்பதாக தெரிவித்தார்.
ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘அண்ணா’ தொடரில் இருந்து நடிகை தர்ஷு சுந்தரம் விலகியுள்ளார். அண்ணன் – தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்தொடரில் அண்ணனாக செந்தில் குமாரும், அவரது நான்கு தங்கைகளில் ஒருவராக தர்ஷு சுந்தரமும் நடித்துள்ளனர். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகுவதாக தர்ஷு சுந்தரம் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.