India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டையில் எச்சரிக்கை இல்லாத வேகத்தடையில் தடுக்கி விழுந்து காவல் ஆய்வாளர் ப்ரியா உயிரிழந்திருக்கிறார். புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் வேகத் தடையில் வெள்ளை நிறம் பூசப்படாமலும், எச்சரிக்கை பலகை வைக்கப்படாமலும் இருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் சென்ற பிரியா, வேகத்தடையில் நேற்று தவறி விழுந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டிடிவி தினகரன் அடிக்கடி நிறம் மாறக்கூடியவர் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேனி பிரசாரத்தில் பேசிய அவர், நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி தான் பாஜக எனக் கூறிய தினகரனே தற்போது அந்தக் கூட்டணியில் இருப்பதாக விமர்சித்தார். மேலும் தனது சுயநலத்திற்காக கட்சி மாறிச் சென்றவர்களுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.
காவிரியில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்பத் தேவையில்லை, தமிழ்நாடு காங்கிரஸ் சொல்வதைக் கேளுங்கள். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு எதையும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.
தேர்தல் முடிந்ததும் திமுக வாக்குறுதிகளை மறந்துவிடும் என பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த அவர், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாக தெரிவித்தார். ஆனால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இந்தத் தேர்தலிலும் அதே வாக்குறுதியை அளிப்பதாக தெரிவித்தார்.
ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘அண்ணா’ தொடரில் இருந்து நடிகை தர்ஷு சுந்தரம் விலகியுள்ளார். அண்ணன் – தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்தொடரில் அண்ணனாக செந்தில் குமாரும், அவரது நான்கு தங்கைகளில் ஒருவராக தர்ஷு சுந்தரமும் நடித்துள்ளனர். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகுவதாக தர்ஷு சுந்தரம் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
2010ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் ’பையா’. இப்படம் வரும் 11ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள தமன்னா, 14 ஆண்டுகள் ஆகியும் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். ’பையா’வின் மேஜிக்கை மீண்டும் ஒருமுறை பெரிய திரைகளில் ரசிகர்கள் பார்ப்பதைக் காண காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் தேர்தலை சந்திக்கிறது. 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை கூறுவதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் SRH அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளைப் பெற்றுள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.
பேடிஎம் பேமெண்ட் பேங்கின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சுரிந்தர் சாவ்லா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். பேடிஎம் பேமெண்ட் பேங்க் மீது ஜனவரி 31ஆம் தேதி ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. டெபாசிட் மற்றும் கடன் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் சுரிந்தர் சாவ்லா ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று திருப்பத்தூர் – 41.6 டிகிரி செல்சியஸ்(dC), ஈரோடு – 40 dC, சேலம் – 39.1 dC, கரூர் பரமத்தி – 39 dC,நாமக்கல் – 38.5 dC, வேலூர் – 38.4 dC, பாளையங்கோட்டை – 38 dC, தருமபுரி – 38.2 dC, மதுரை ஏர்போர்ட் – 38.4 dC, திருத்தணி – 37.7 dC வெப்பம் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.