India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காவி நிறத்தில் திருவள்ளுவர் புகைப்படம் வெளியானதற்கு அதிமுக நிர்வாகி வைகை செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு காவிச் சாயமா? என்று விமர்சித்துள்ள அவர், சாயாத சரித்திரத்தை காவி சாயம் என்ன செய்துவிட போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் மாளிகை காவி நிறத்தில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, முன்னாள் ஆஸி., வீரர்களை அணுகவில்லை என ஜெய் ஷா கூறியுள்ளார். பயிற்சியாளர் பதவியை ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் நிராகரித்ததாக தகவல் வெளியானது. இதற்கு விளக்கமளித்த அவர், இந்திய அணிக்கு சரியான பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானது என்றும், இந்திய கிரிக்கெட் கட்டமைப்பைப் பற்றிய புரிதல் உள்ளவர்களையே நாங்கள் தேர்ந்தெடுப்போம் எனவும் தெரிவித்தார்.
காவல்துறையினர் பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, போலீசாருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிற்கும் அரசுப் பேருந்துகளுக்கு நேற்று போலீசார் அபராதம் விதித்த நிலையில், இன்று வள்ளியூரில் அரசுப் பேருந்தில் சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி 3 ஓட்டுநர்களுக்கு ₹500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜகவை வலிமைப்படுத்த மீண்டும் பாத யாத்திரை செல்ல உள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போதே அனைத்து தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க தலைமையிடம் வலியுறுத்த உள்ளதாகக் கூறினார். மோடிக்கு ஓய்வு என்பதே இல்லை என்றும், ராகுல், கெஜ்ரிவாலை விட சிறப்பாக பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. முதலில் களமிறங்கிய WI அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பிராண்டன் கிங் 79 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய SA அணி, 19.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 3 போட்டி கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் WI முன்னிலையில் உள்ளது.
தமிழக கடல் பகுதிகளில் இன்று மாலை 4.1 மீட்டர் வரை அலைகள் எழும்பக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தமிழக கடற்பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையும், வட தமிழக கடற்பகுதியில் பழவேற்காடு முதல் கோடியக்கரை வரையும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை அலைகளின் உயரம் 0.6 – 4 மீட்டர் வரை இருக்கும். எனவே, தென் வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
பாஜக அதிக வாக்குகள் வாங்கினால் கட்சியை கலைத்து விடுவதாக சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் இல்லாமல், பாஜக மட்டும் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்குகளை வாங்கினால், கட்சியை கலைத்துவிடுவதாக அவர் சவால் விடுத்துள்ளார். கடந்த MP தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட நாதக 3.90% வாக்குகளும், அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 3.62% வாக்குகளும் பெற்றது.
‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்பின், ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பை ஜப்பானில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
SRH-RR இடையேயான Qualifier 2 போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில், பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்கப்படாமலே உள்ளன. கிரிக்கெட்டை கொண்டாடும் சென்னை , ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டியை காண ஆர்வம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு CSK அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தேர்வாகததும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
வங்கக்கடலில் நாளை புயல் உருவாவதால் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைதிரும்பும்படி வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் உருவாவதையொட்டி மத்திய கிழக்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று சூறாவளி மணிக்கு 50- 70 கி.மீ. வேகத்திலும், நாளை 60- 135 கி.மீ. வேகத்திலும், 26, 27 தேதிகளில் 90-135 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.