India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒடிஷாவை தமிழன் ஆண்டால் மோடிக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? என சீமான் வினவியுள்ளார். வி.கே.பாண்டியன் முதல்வராக வருவதற்கு முன்பே ஒடிஷாவை தமிழன்தான் ஆளலாமா? என பாஜக விமர்சிப்பதாக தெரிவித்த அவர், குஜராத்தில் பிறந்த மோடி மட்டும் ஏன் இந்தியாவை ஆளுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொன்ன போது தங்களை விமர்சித்த பாஜக, இப்போது அதற்கு நேர் எதிராக பேசுவதாக கூறினார்.
தமிழகத்தில் பெய்யும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பும் சூழலில், சில மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொள்ளிடம் ஆறு (திருச்சி), பவானி ஆறு (ஈரோடு), தாமிரபரணி ஆறு (நெல்லை ), குமரி கோதையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இணைய உலகில் செல்ஃபோன் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் செல்ஃபோனில் மூழ்கி கிடக்கின்றனர். இந்நிலையில், செல்ஃபோனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைகளின் மூளையை பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கண்களுக்கு அழுத்தத்தை கொடுப்பதாகவும், உடல் பருமன், சோம்பல், மனச்சோர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கோடை விடுமுறையையொட்டி திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இதன் காரணமாக, பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஜூன் 30ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் VIP தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கான அறிகுறிகள் தெளிவாக உள்ளதாக விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லும் அளவுக்கு பிரதமர் மோடி பிதற்ற ஆரம்பித்துள்ளதாக விமர்சித்த அவர், இந்து மக்கள் மத்தியில் பிரதமரின் பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். 6ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் 57 தொகுதிகளில், பாஜக 15 இடங்களில் கூட வெற்றி பெறாது என்றும் அவர் சூளுரைத்தார்.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். முன்னாள் மனைவி பீலா வீட்டின் காவலாளியை தாக்கிய புகாரில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக நீதிமன்றத்திற்கு செல்லும் முன் ராஜேஷ் தாஸுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 தொடருக்கான தூதுவராக ஷாஹித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, சுரேஷ் ரெய்னாவை பாக்., ஊடகவியலாளர் ஒருவர் தனது X பக்கத்தில் கிண்டல் செய்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ரெய்னா, தான் ஐசிசி தூதுவராக இல்லாவிட்டாலும், தன் வீட்டில் 2011 உலகக்கோப்பை இருப்பதாகவும், மொஹாலியில் நடந்த அரையிறுதிப் போட்டியில் தோற்றது தங்களுக்கு ஞாபகம் இருக்கும் எனவும் பதிலடி கொடுத்தார்.
நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது, கார்த்திக் பற்றி சுசித்ரா அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி கார்த்திக் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இளைஞர்கள், பெண்களின் பிரதிநிதியாக கங்கனா ரனாவத் தேர்தலில் களம் காண்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மண்டி தொகுதியில் கங்கனாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், 5 கட்டத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை கடந்து விட்டதாகவும், இமாச்சலில் பெறும் வெற்றி கேக் மீது செர்ரி பழத்தை வைப்பதற்கு ஒப்பானது என்றார். மக்களின் வாக்குகள் 500 ஆண்டுகால ஏக்கத்தை தீர்த்து, அயோத்தியில் கோயில் கட்ட வைத்தாகவும் அவர் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், மாவட்டந்தோறும் உள்ள குடோன்களுக்கு, தலைமை ஆசிரியர்கள் நேரில் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தேவையான அளவு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மழையால் புத்தகங்கள் நனையாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.