India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தற்போது நெல்லை, தென்காசி, குமரி, திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனிடையே, அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற RR அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து SRH அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இன்று எந்த அணி வெற்றிபெறும்?
டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாரிஸில் நடந்த விவா டெக் 2024 நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற அவர், AI காரணமாக வருங்காலத்தில் நம்மில் யாருக்கும் வேலை இருக்காது என எச்சரித்தார். கணினிகள் மற்றும் ரோபோக்களால் மனிதர்களை விட எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடிந்தால் நமது வாழ்க்கைக்கான அர்த்தம் இருக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மீம்ஸ் மூலம் பிரபலமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘கபோசு’ என்ற நாய் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது. தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக அதன் உரிமையாளர் சமூக வலைதளங்களில் உருக்கமாக தெரிவித்துள்ளார். மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான இந்த நாய்க்கு, கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, கிரிப்டோ கரன்சியின் லோகோவாக இந்த நாயின் புகைப்படம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிய மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழுவின் அறிவிப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் எனக் கூறியுள்ள அவர், புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் முன்மொழிவு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த வியாபாரி ஜெயராஜின் மனைவி செல்வராணி தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. ஒரே ஒரு சாட்சியிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், விரைவில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் என்றும் CBI தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸில் இருந்து விப்ரோ நிறுவனத்தை நீக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாப் 30 நிறுவனங்களை கொண்ட சென்செக்ஸ் பட்டியலில் ஜூன் 24ஆம் தேதி விப்ரோ வெளியேற்றப்பட்டு, அதற்கு பதிலாக அதானி போர்ட் நிறுவனம் சேர்க்கப்படவுள்ளது. இதன் மூலம் சென்செக்ஸில் அதானி குழுமத்தின் நிறுவனம் முதல்முறையாக இடம்பெறுகிறது. நிஃப்டியில் 2 அதானி குழும நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சபீரிடம் ₹1 கோடி மதிப்பிலான பழைய ₹500, ₹1000 நோட்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில், அம்மாப்பேட்டையில் உள்ள சபீர் வீட்டுக்குச் சென்ற போலீசார், ₹1 கோடி செல்லாத நோட்டுகளை பறிமுதல் செய்ததுடன், அவரையும் கைது செய்தனர்.
மூன்றாவது குழந்தையை பெற்றுக் கொண்ட காரணத்துக்காக, பாஜகவின் இரு கவுன்சிலர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினோத நிகழ்வு குஜராத்தில் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் நகராட்சி சட்டத்தின் கீழ், 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டோர் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில், பாஜக கவுன்சிலர்கள் 2 பேருக்கு அண்மையில் 3ஆவது குழந்தை பிறந்த நிலையில், அவர்களை தகுதி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி நடிக்கும் ‘மெய்யழகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி – அரவிந்த் சுவாமி இருவரும் ஒரே சைக்கிளில் பயணிப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் தஞ்சை பெரிய கோயில் படம் இடம்பெற்றிருப்பதால் இது கிராமத்து பின்னணி கொண்ட கதையாக இருக்கும் என கூறப்படுகிறது
Sorry, no posts matched your criteria.