News May 24, 2024

ஐ.நாவில் வாக்களிக்கும் உரிமையை இழந்தது ஆப்கன்

image

உறுப்பினர் கட்டணத்தை செலுத்தாததால் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்கும் உரிமையை ஆப்கானிஸ்தான் இழந்துள்ளது. தாலிபான் அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தற்போது வரை மொத்தமாக $9,00,000 கட்டணம் செலுத்தப்படாமல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையை செலுத்தும் வரையில், தீர்மானங்கள் மீது ஆப்கானிஸ்தான் வாக்களிக்க முடியா விட்டாலும், அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் பங்கேற்க முடியும்.

News May 24, 2024

ஐபிஎல்லில் போல்ட் புதிய சாதனை

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் போல்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன் மூலம் ஐபிஎல் தொடரில் பவர்-ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் (62) என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்தப் பட்டியலில் 71 விக்கெட்டுகளுடன் புவனேஷ் குமார் முதல் இடத்தில் உள்ளார். சந்தீப் ஷர்மா 59 விக்கெட்டுகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

News May 24, 2024

இந்திய ரூபாய் நோட்டுகள் லண்டனில் ஏலம்

image

1918ஆம் ஆண்டு மும்பையில் இருந்து லண்டனுக்கு மது, நாணயம், ரூபாய் நோட்டுகள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற எஸ்.எஸ்.ஷிராலா என்ற கப்பல் ஜெர்மன் தாக்குதலால் நீரில் மூழ்கியது. அதில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு ₹10 நோட்டுகள் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. லண்டனில் மே 29ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் அந்த ரூபாய் நோட்டுகள், இந்திய மதிப்பில் ₹2.7 லட்சம் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 24, 2024

ரேஷன் அட்டை கிடைத்ததும் விண்ணப்பிக்கலாம்

image

மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு, புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, புதிய ரேஷன் அட்டை பெறும் பெண்கள், உரிமைத் தொகை ₹1000 கேட்டு விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உரிமைத் தொகை பெற, ரேஷன் அட்டையே பிரதான ஆவணம். இதனால், புதிய அட்டையை பெறும் பெண்கள், சம்பந்தப்பட்ட அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

News May 24, 2024

பெங்களூரு குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது

image

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி குண்டு வெடித்ததில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 4 பேரை கைது செய்திருந்த நிலையில், இன்று மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். கடந்த 3 நாள்களாக 4 மாவட்டங்களில் NIA சோதனை நடத்திவந்த நிலையில், ஹூப்ளியில் அகமது மிஸ்ரா என்பவரை கைது செய்துள்ளனர்.

News May 24, 2024

பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் மின்சாரம் தொடர்பாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஈரக் கையால் மின் இணைப்புகளை தொடாதீர்கள். மழை பெய்யும்போது மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். மின்சார தாக்குதலை தவிர்க்க ரப்பர் காலணிகளை அணிய வேண்டும். மின்சார பழுது ஏற்பட்டால் மின்சார வாரியத்தை அணுக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

News May 24, 2024

புதிய வரலாறு படைப்பாரா நவீன் பட்நாயக்?

image

ஒடிஷா தேர்தலில் நவீன் பட்நாயக் வென்றால் இந்தியாவின் நீண்ட கால முதல்வர் என்ற சாதனையை அவர் படைப்பார். இதுவரை 5 முறை ஆட்சி அமைத்துள்ள அவர், இதுவரை முதல்வராக 24 வருடம் 79 நாள்கள் இருந்துள்ளார். சிக்கிம் முதல்வராக 5 முறை இருந்துள்ள பவன் குமார் சாம்லிங், முதல்வராக 24 வருடம் 165 நாள்கள் இருந்துள்ளார். இந்த முறை நவீன் மீண்டும் வெற்றி பெற்றால், அந்த சாதனையை அடுத்து சில மாதங்களில் அவர் முறியடிப்பார்.

News May 24, 2024

வரலாற்று உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

image

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 3ஆவது வாரமாக அதிகரித்து, வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, $4.54 பில்லியன் அதிகரித்து, $648.7 பில்லியன் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தங்கத்தின் கையிருப்பு $1.24 பில்லியன் அதிகரித்து, $57.19 பில்லியனாக உள்ளது. Special Drawing Rights பொறுத்தமட்டில், $113 மில்லியன் அதிகரித்து, $18.16 பில்லியனாக உள்ளது.

News May 24, 2024

புனே கார் விபத்தில் ஓட்டுநர் பகீர் வாக்குமூலம்

image

புனே கார் விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, சிறுவன் காரை இயக்கவில்லை, அவரது வீட்டில் பணிபுரியும் டிரைவர்தான் காரை ஓட்டியதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், விலைமதிப்பற்ற பரிசைத் தருவதாகக் கூறி சிறுவனின் தந்தை தன்னிடம் பேரம் பேசி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்ததாக போலீசார் விசாரணையில் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

News May 24, 2024

ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய க்ளாஸன் 50, டிராவிஸ் ஹெட் 34, திரிபாதி 37 ரன்கள் எடுத்தனர். RR அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் ஷர்மா 2, போல்ட், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து RR அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!