India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஐதராபாத் 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடத்துவங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது. சஷாங்க் சிங் 46, அசுதோஷ் சர்மா சர்மா 33 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடிய நிலையிலும், வெற்றி இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை.
தேவர் மகன், சின்ன கவுண்டர் படங்கள் வெளியான போது சாதிய படம் என்ற கேள்வி எழாதது ஏன் என பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற PK ரோஸி திரைப்பட விழாவில் பேசிய அவர், “1990 காலக்கட்டத்தில் தமிழ் சினிமா மொத்தமாக மாறியிருந்தது. ஏராளமான சாதியப் படங்கள் வெளியாகின. சாதிகளை வெளிப்படையாக பேசிய படங்கள் வந்தன. அவை விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டதா?” போன்ற கேள்விகளை முன்வைத்தார்.
தமிழ் கலாசாரத்திற்கு பாஜக என்றும் மரியாதை அளிக்கிறது என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று வாகனப் பேரணியில் கலந்துகொண்டது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு NDA கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த நகரத்திற்காக நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகங்கள், ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சி அடையும்போது சில ராசிகளுக்கு நன்மை, தீமைகள் ஏற்படும். அந்த வகையில் தற்போது நவ கிரகங்களில் ஏற்பட்டுள்ள பெயர்ச்சியால் சிம்மம், விருச்சிகம், மகரம், கும்ப ராசியினருக்கு குபேர யோகம் காத்திருக்கிறது. இவர்கள் தொட்டதெல்லம் இனி பொன்னாகும். ஒரு மடங்கு முதலீடு செய்தால் 10 மடங்கு லாபம் கொழிக்கும். பண வரவு தேவைக்கும் அதிகமாக கொட்டும்.
வாக்கு கேட்டு மட்டும் வந்து செல்ல தமிழ்நாடு என்ன சரணாலயமா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று வாகனப் பேரணி சென்றார். அதனை சுட்டிக்காட்டிய முதல்வர், தேர்தலின்போது மட்டும் சந்திக்க தமிழக மக்கள் என்ன 2ஆம் தர குடிமக்களா? என வினவினார். மேலும், சமூக நீதி மீது அக்கறையுள்ள பிரதமரையே மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தாய் ஷோபனாவுக்காக நடிகர் விஜய், சாய் பாபா கோயில் கட்டிய நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாய் பாபா கோயிலில் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் நேற்று வைரலானது. அந்தக் கோயில் சென்னை கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலத்தில், நடிகர் விஜய் கட்டியது எனத் தெரியவந்துள்ளது. ஷோபா தீவிர சாய் பாபா பக்தை என்பதால், அவரது ஆசைக்காக 8 கிரவுண்ட் நிலத்தில் விஜய் இந்தக் கோயிலை கட்டிக் கொடுத்துள்ளார்.
பொதுப்பணி, தொழில்நுட்பம், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருமணம் ஆகாத ஆண்கள்/பெண்கள் ஏப்.22ஆம் தேதிக்குள் <
இன்று இரவு சென்னை ராஜ் பவனில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை 9 மணிக்கு வேலூருக்கு புறப்படுகிறார். 10.30 மணியளவில் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் கோவை செல்லும் மோடி, 1.45 மணிக்கு மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து, 3 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து நாக்பூர் புறப்படுகிறார்.
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் முகமது அப்துல் அர்பாத் (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. கடந்த 6ஆம் தேதி கிளீவ்லாந்தில் படித்து வந்த உமா சத்ய சாய் கட்டே என்பவர் 10ஆவது நபராக மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்குள் அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்ட மேற்படிப்பு படித்து வந்த அர்பாத் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
கார் விபத்தில் படுகாயம் அடைந்து ஒன்றரை ஆண்டுகளாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ரிஷப் பந்த், தற்போது ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெல்லி அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்துவரும் அவர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், டி20 WCக்கான இந்திய அணியில் அவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக Cricbuzz தெரிவித்துள்ளது. அவர் அணிக்கு திரும்பினால் அணி மேலும் வலுவடையும் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.