India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக சார்பில் போட்டியிடும் தனது மகன் அனில் ஆண்டனி தோல்வி அடைய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி விருப்பம் தெரிவித்துள்ளார். “காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் பாஜகவில் இணையும் செயல் தவறானது. காங்கிரஸ் தான் பாஜகவின் மதவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் கட்சி” என்றார். முன்னதாக கேரளாவின் பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக ஏ.கே.அந்தோனியின் மகன் போட்டியிடுகிறார்.
குதிகால் வலி, முதுகு வலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க செல்ல வேண்டாம். நாற்காலியும், செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா, நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா என்பதை கவனியுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, 5 நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ளுங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
இன்று (ஏப்ரல் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
ஸ்டாலினின் நடிப்புக்கு முன்னால் சிவாஜியே தோற்றுவிடுவார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். கடந்த 15 நாட்களாக பரப்புரை செய்யும் ஸ்டாலின், என்னை பற்றியே பேசுகிறார். தன் ஆட்சியில் ஏதாவது செய்திருந்தால் தானே, அவரால் அதைப்பற்றி பேச முடியும் என கேள்வி எழுப்பிய அவர், அமைச்சர் உதயநிதி விரக்தியின் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார். அதிமுகவின் வெற்றியை திமுகவால் தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆரின் வலது கையாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மறைந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என நடிகர் கமல்ஹாசன் புகழாரம் தெரிவித்துள்ளார். அரசியலிலும், சினிமாவிலும் மூத்தவராக இருந்தவர். தான் கொண்ட கொள்கையில் கடைசி வரை விலகாமல் பயணித்து மறைந்திருக்கிறார். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று கூறிய அவர், சினிமாவில் அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள் அதிகம் எனவும் தெரிவித்தார்.
இன்று (ஏப்ரல் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ சென்னையில் பிரதமர் மோடி வாகனப் பேரணி
➤ கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் இல்லை – டெல்லி உயர்நீதிமன்றம்
➤திமுகவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை – இபிஎஸ்
➤ தமிழ்நாட்டில் தாமரை மலர வாய்ப்பே இல்லை – முதல்வர் ஸ்டாலின்
➤ நடிகர் அமீர் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு
➤ டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பந்த் விளையாட வாய்ப்பு
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த காங்., எம்பி திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்துள்ளார். ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அவர், அரசியல் உலகில் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர். எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத நேர்மையான மனிதர். மூத்த அரசியல்வாதியான அவரது இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அவர், அந்தத் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அதற்காக, தண்டேஸ்வரநல்லூரில் உள்ள நிர்வாகி ஒருவர் வீட்டில் கடந்த 2 நாட்களாக அவர் தங்கியிருந்த நிலையில், அங்கு ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்திச் சென்றனர்.
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள மா.பொ.சி. படத்தை எடுப்பதற்கு முன்பு அனுமதி வாங்க வேண்டாமா என மா.பொ.சியின் பேத்தி பரமேசுவரி கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய பெயரில் படத்தின் தலைப்பை வைத்துவிட்டு அது அவருடைய கதை இல்லை எனக் கூறுவதற்கு வெட்கமாக இல்லையா என கடுமையாக விளாசிய அவர், தமிழ் இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சி எனத் தனக்கு தோன்றுவதாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.