India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
RR-க்கு எதிரான Qualifier 2 போட்டியில் வெற்றி பெற்று, SRH அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸி,. வீரர் பேட் கம்மின்ஸ், டி20 கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆடம் கில்கிறிஸ்ட், டேவிட் வார்னர் தலைமையிலான SRH அணி, 2 முறை (2009, 2016) ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ளதால், 3ஆவது முறையும் கோப்பையை கைப்பற்றுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தினை உரிய காலக்கெடுவிற்குள் முடித்திடும் பொருட்டு நாளை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது. மாதத்தின் முதல் 2 ஞாயிற்றுக்கிழமை தவிர, மீதமுள்ள ஞாயிற்றுகிழமைகள் விடுமுறை அளிக்கப்படும். ஆனால், நாளை பணி நாளாக இருக்கும் என்பதால், இதற்கு ஈடாக மற்றொரு நாளில் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6ஆவது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதையொட்டி, காலையிலேயே வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றி வருகின்றனர். தேர்தல் அமைதியாக நடைபெற பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூமாதேவியை இம்சித்த இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து, காத்த வராகரை வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. சனிக்கிழமையன்று விரதமிருந்து, வராகர் அவதரித்த திருத்தலமாகப் போற்றப்படும் திண்டிவனம் அருகே உள்ள பெரமண்டூர் ஆதிவராகர் கோயிலுக்கு சென்று, நெய் தீபமேற்றி, வராக மூலமந்திரத்தை 108 முறை பாடி, துளசி மாலை சாற்றி வழிபாட்டால் நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
தமிழகத்தில் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கேரளா, அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால் இன்று முதல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
SRHக்கு எதிரான Qualifier 2 போட்டியில் மிக மோசமான பேட்டிங் காரணமாக RR தோல்வியடைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (42), ஜூரேல் (56) தவிர வேறும் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் தலா 10 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். 7 ஓவரில் 56/1 என்ற நிலையில் இருந்த RR, கடைசி 5 ஓவர்களில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் INDIA கூட்டணி பெரும்பான்மை பலத்தை பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். INDIA கூட்டணி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என சொல்ல முடியாது எனக் கூறிய அவர், அரசியலில் அதுபோன்ற கணக்குகள் சரியாக அமையாது என்றார். அத்துடன், அனைத்து மாநிலங்களிலும் பாஜக தனது செல்வாக்கை இழந்து வருகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது எனத் தெரிவித்தார்.
தெற்கு வங்கக்கடலில் 23ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் வடகிழக்கில் நகர்ந்து மத்திய வங்கக் கடலில் நேற்றிரவு புயலாக மாறியது. இதற்கு ராமெல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தொடர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது மேலும் வடக்கில் நகர்ந்து, இன்றிரவு தீவிர புயலாக வலுப்பெற்று, நாளை இரவு மேற்குவங்கத்தில் கரையை கடக்கும்.
மக்களவைக்கு 6ஆவது கட்டத் தேர்தல் நடக்கும் 58 தொகுதிகளில் கடந்த 2019 தேர்தலில், காங்கிரஸ் ஒன்றில் கூட வென்றதில்லை. INDIA கூட்டணி கட்சிகளான திரிணாமுல், தேசிய மாநாடு, சமாஜ்வாதி ஆகியவை கூட்டாக 5 இடங்களில் வென்றன. பாஜக (40) கூட்டணி, 45 தொகுதிகளில் வென்றிருந்தன. காங்கிரஸ் கூட்டணி 28.66%, பாஜக 40% வாக்குகள் பெற்றன. 2014 தேர்தலில் பாஜக கூட்டணி 39, காங்கிரஸ் கூட்டணி 11, மற்ற கட்சிகள் 8இல் வென்றன.
2025-க்குள் இந்திய மருந்துகளின் ஏற்றுமதி மதிப்பு ₹2.49 லட்சம் கோடியாக உயரும் என்று PEPC கணித்துள்ளது. அதன் அறிக்கையில், இந்தியா தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்கிறது. அதில், அமெரிக்காவுக்கு 40% ஜெனரிக் மருந்துகளும், WHO-க்கு (70%) தடுப்பூசிகளும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த விகிதம் வரும் ஆண்டுகளில் வளர்ச்சி அடையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.