India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாடல்கள் மீது இசையமைப்பாளர் உரிமை கோர முடியாது எனத் தயாரிப்பாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார். ‘கண்மணி அன்போடு’ பாடலைப் பயன்படுத்தியதற்காக, மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், “பாடலைத் தயாரிக்க சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதோடு இசையமைப்பாளர்களின் கடமை முடிந்தது. இந்த பிரச்னைகளுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” கேட்டுக் கொண்டார்.
தனியார் தொலைக்காட்சி பேட்டியின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை கூறியதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் கருத்து ஜெயலலிதாவை பற்றிய தவறான புரிதலை வெளிபடுத்துவதாகவும், சாதி, மத பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் போற்றக்கூடிய மாபெரும் தலைவியாக ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
குரூப் 2 முதன்மைத் தேர்வில் விரிவாக விடையளிக்கும் வகையிலும், குரூப் 2A முதன்மைத் தேர்வில் தமிழ் தகுதித் தாளுக்கு விரிவாக விடையளிக்கும் வகையிலும் புதிய பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 50% பட்டப்படிப்புத் தரத்திலான பொது அறிவு சார்ந்த வினாக்களும், 20% 10ஆம் வகுப்பு கணக்கு சார்ந்த வினாக்களும், 30% 10ஆம் வகுப்பு பொது தமிழ், ஆங்கிலம் சார்ந்த வினாக்களும் புதிதாக இடம்பெற்றுள்ளன.
உ.பி.யில் மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்ள அவரது வயிற்றை கிழித்த கணவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. திருமணமாகி 22 ஆண்டுகளான பன்னா லால், அனிதா தம்பதிக்கு ஏற்கெனவே 5 பெண்கள் குழந்தைகள் உள்ளன. அடுத்ததாக ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் கணவர் செய்த இந்த வெறிச் செயலால், 8 மாத கர்ப்பிணியான அனிதா வற்றியில் இருந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.
உலகக் கோப்பை பயிற்சியைத் தொடங்குவதற்காக, இந்திய அணி இன்று நியூயார்க் செல்ல இருக்கிறது. முதல்கட்டமாக, ரோஹித், கோலி, பும்ரா, பண்ட் ஆகியோர் இரவு 10 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளதாகவும், ஜெய்ஸ்வால், சாம்சன், சஹல், ரிங்கு சிங் ஆகியோர் 2ஆம் கட்டமாக நாளை புறப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாண்டியா ஏற்கெனவே லண்டனில் உள்ளதால், அவரும் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 16.54%, உ.பி.யில் 12.33%, ஜார்கண்டில் 11.74%, பிஹாரில் 9.66%, டெல்லியில் 8.94%, ஜம்மு & காஷ்மீரில் 8.89%, ஹரியானாவில் 8.31%, ஒடிசாவில் 7.43% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டம் ரகுநாத்பூரில் 5 இவிஎம் மற்றும் விவிபேட் எந்திரங்களில் பாஜக என எழுதப்பட்ட டேக் கட்டப்பட்டிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. பாஜகவுக்காக வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முயற்சி நடப்பதாகவும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சித் தொண்டர்களைக் காரணமின்றி போலீஸ் கைது செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி அக்கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடும் அவர், வாக்குப்பதிவு தொடங்கும் முன்பு தனது கட்சியினரைக் காரணமின்றி போலீஸ் கைது செய்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
ரயில்களில் இரவு 10 மணிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய சில விதிகள் உள்ளன. அவை என்னென்ன? * டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் பரிசோதனைக்கு வரக்கூடாது *இரவு விளக்கு தவிர அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும் *பயணிகள் சத்தமாக பேசக் கூடாது *மிடில் பெர்த் பயணி, தூங்குவதற்கு லோயர் பெர்த் பயணி இடையூறாக இருக்கக் கூடாது *ரயிலில் உள்ள ஆன்லைன் உணவு சேவைகள் மூலம் ஆர்டர் செய்ய முடியாது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம், வெளியீட்டிற்கு தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், ஜூன் மாதத் தொடக்கத்தில் புரமோஷன் வேலைகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் கூடிய விரைவில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.