India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தினேஷ் கார்த்திக்குடன் விளையாடியதும், அவரது கிரிக்கெட் பயணத்தை அருகில் இருந்து பார்த்ததும் பெருமையாக கருதுவதாக தமிழக வீரர் நடராஜன் புகழாரம் சூட்டியுள்ளார். தினேஷ் கார்த்திக்கின் ஓய்வு குறித்து பேசிய அவர், எண்ணற்ற நினைவுகளை வழங்கி, சிறப்பான ஆலோசகராகவும், சக வீரராகவும் இருந்ததற்கு நன்றி அண்ணா என்றும், கிரிக்கெட் உலகில் உங்கள் புகழ் என்றென்றும் ஜொலிக்கும் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கான ஜெயலலிதாவின் திட்டங்களைப் பட்டியலிட்டு, சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமானத் தலைவராகத் திகழ்ந்ததாகவும், ஆனால் அரசியல் லாபத்திற்காக அவரது பெயர், புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
குமரி, தென்காசி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும் என்றும், வரும் 28ஆம் தேதி வரை குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
ஜெயலலிதாவை இந்துமதத் தலைவர் என்று அண்ணாமலை கூறியதற்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நேரத்தில், ஆர்பி உதயகுமாரும் கண்டனம் தெரிவித்து பேட்டியளித்தார். அதிமுகவில் ஜெயக்குமார் ஓரங்கட்டப்பட்டு, உதயகுமாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் 2 பேரும் ஒரேநேரத்தில் அறிக்கை, பேட்டியில் கண்டனம் தெரிவித்தது, போட்டி நிலவுகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு, முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆர்வம் காட்டுவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதால், புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் BCCI தீவிரம் காட்டி வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டமைப்பைப் பற்றியும், அணியைப் பற்றிய புரிதல் உள்ளவர்களையும் தேர்ந்தெடுப்பதில் பிசிசிஐ குறிக்கோளாக உள்ளது.
டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 1 மணி நிலவரப்படி 39.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் 54.80%, ஜார்கண்டில் 42.54%, உ.பி.யில் 37.23% பிஹாரில் 36.48%, ஜம்மு & காஷ்மீரில் 35.22%, ஹரியானாவில் 36.48%, டெல்லியில் 34.37%, ஒடிசாவில் 35.69% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதுவரை 81,822 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. கடைசி சில மணி நேரமே இருப்பதால் மாறுதல் பெற விருப்பமுள்ள அனைத்து வகை அரசுப் பள்ளி ஆசிரியர்களும் எமிஸ் மூலம் விரைவாக விண்ணப்பிக்கவும்.
வீதிகளில் யாசகம் கேட்டும், கஷ்ட நிலையிலும் சிலர் இருப்பதை பார்த்திருப்போம். ஆன்மிகத்தில் அவர்கள் சனிபகவானால் ஆட்கொள்ளப்பட்டு முந்தைய பிறவி பாவங்களை இந்த பிறவியில் கழித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்தகையவர்களுக்கு நிதியுதவியோ, உணவோ அளித்து உதவினால் சனிபகவான் அருள் கிடைக்கும் என்றும், இதனால்தான் தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது என்றும் ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஆறுமுகப்பாண்டி பயணச்சீட்டு எடுக்க முடியாது என வாக்குவாதம் செய்ததால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. வாரண்ட் இருந்தால்தான் டிக்கெட் இல்லை என போக்குவரத்து துறை கூறிய நிலையில், அரசுப் பேருந்துகளை நிறுத்தி போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இந்தப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது குறித்து, 2 துறைகளின் செயலர்களும் சந்தித்து பேசினர்.
பிரான்ஸில் நடைபெற்று வரும் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில், சிறந்த நடிகைக்கான விருதை பாலிவுட் நடிகை அனசுயா சென்குப்தா பெற்றுள்ளார். கான்ஸ்டன்டைன் போஜனாவ் இயக்கிய ‘ஷேம்லஸ்’ ஹிந்தி படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு, ‘Uncertain Regard’ பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால், கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெறும் முதல் இந்திய நடிகை என்ற மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.