News May 25, 2024

‘சர்தார் 2’ படப்பிடிப்பு ஜூலையில் தொடக்கம்

image

கார்த்தி நடிக்க உள்ள ‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதில், கார்த்திக்கிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகையைத் தேர்வு செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஹிந்தி சினிமாவில் பெரியளவில் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பை அஜர்பைஜான், கஜகஸ்தான், ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடத்தவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

News May 25, 2024

பதவியின் மாண்பை குலைத்து விடாதீர்கள்

image

முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என பிரதமரை மறைமுகமாக சரத் பவார் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலம் குறித்த மோடியின் பேச்சுகள் வேதனை தருகிறது என்று கூறிய அவர், பிரதமர் பதவியின் மாண்பை தேவையற்ற பேச்சுக்களின் மூலம் யாரும் குலைக்க கூடாது என்றார். முன்னதாக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியதாக மோடி கூறியிருந்தார்.

News May 25, 2024

குட்கா தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

image

தமிழகம் முழுவதும் புகையிலை பொருள்களை விற்பதற்கான தடை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருள்கள் உடல்நலத்திற்கு கேடு என்பதால், 2013 முதல் தமிழகத்தில் அதனை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தடை உத்தரவு 2025 மே 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீறினால் பொருள்களை பறிமுதல் செய்வதுடன், ₹5000 வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

News May 25, 2024

இன்று முதல் படிப்படியாக வெப்பநிலை உயரும்

image

தமிழகத்தில் இன்று முதல் 29ஆம் தேதி வரை படிப்படியாக வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3°C வரை அதிகரித்து 39- 40 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 25, 2024

இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

image

மலேசியா மாஸ்டர் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றில், பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார். தாய்லாந்து வீராங்கனை பூசனனுக்கு எதிரான இப்போட்டியில், சிந்து முதல் செட்டில் (13-21) தோல்வி அடைந்தார். அதன்பின், 2 & 3ஆவது செட்டுகளில் அதிரடியான கம்பேக்கை கொடுத்து, 21-16, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில், சீன வீராங்கனையை எதிர்கொள்ள உள்ளார்.

News May 25, 2024

ஸ்ரீ தேவியை ஒருதலையாக காதலித்தாரா ரஜினி?

image

தமிழ் திரையுலக கனவு கன்னிகளில் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியும் ஒருவர். அவரும், ரஜினியும் ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 19 படங்கள் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது அவர் மீது காதல்வயப்பட்ட ரஜினி, ஸ்ரீதேவி வீட்டு கிரகபிரவேசத்தன்று சொல்ல முயன்ற போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இதைக் கெட்ட சகுனமாகக் கருதி ரஜினி தனது காதலை சொல்லாமல் திரும்பி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News May 25, 2024

மீன்கள் விலை உயர்வு

image

தமிழகத்தில் அமலில் உள்ள மீன்பிடி தடைக்காலம் மற்றும் ரெமல் புயல் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, வஞ்சிரம், பாறை, ஷீலா, கெளுத்தி, கட்லா, குருவளை உள்ளிட்ட மீன்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளன. வார இறுதி நாளில் மீன்களின் விலை இப்படி உயர்ந்துள்ளது நடுத்தர வர்க்க மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

News May 25, 2024

400 தொகுதிகளில் வெற்றி என பாஜக “ஜோக்” அடிக்கிறது

image

400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பாஜக ஜோக் அடிப்பதாக முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் சாடியுள்ளார். 4, 5 மற்றும் 6ஆவது கட்டத் தேர்தல்களில் மக்கள் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை விவாதித்ததால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், ஆதலால் 400 தொகுதிகளில் வெல்வோம் என்ற பாஜகவின் பிரசாரத்துக்கு முக்கியம் அளிக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.

News May 25, 2024

ஸ்டாலினுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த அர்ஜுன்

image

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இரு வீட்டாரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதைத் தொடர்ந்து, கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.

News May 25, 2024

741 ரன்கள் குவித்தும் கோலியை தொடரும் சர்ச்சை

image

2024 ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுடன் ஆர்சிபி அணி வெளியேறியது. இருப்பினும் அந்த அணி வீரர் விராட் கோலி, 15 போட்டிகளில் அதிரடியாக விளையாடி 741 ரன்கள் குவித்தார். இதில் 1 சதம், 5 அரைசதங்கள் அடங்கும். அவரின் மொத்த பேட்டிங் சராசரி 61.75% ஆகும். இருப்பினும் ஆர்சிபி அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறாததால், சிறப்பாக விளையாடியும் தனிநபர் சாதனைக்காக விளையாடியதாக கோலி சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.

error: Content is protected !!