India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு எல்லையில் ஊடுருவலைத் தடுக்கவில்லை என அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். தக்சின் தினாஜ்பூரில் பிரசாரம் செய்த அவர், வாக்குகளுக்காக மம்தா பானர்ஜி ஊடுருவலை அனுமதிப்பதாக விமர்சித்தார். அசாமில் பாஜக ஊடுருவலை தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தில் பாஜக 30 தொகுதிகளை வென்றால் ஊடுருவலைத் தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.
மேகதாது அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி தரவில்லை. அதனால் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மக்களுக்கு உறுதியளித்துள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசு மேகதாது அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்., கட்சியின் இந்த நிலைபாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10 பேருக்கு சொத்துகளே இல்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. முதல்கட்ட தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதில் 10 பேர் தங்களுக்கு அசையும் சொத்தோ, அசையா சொத்தோ இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதுபோல், தமிழகத்தில் 7 சுயேச்சை உள்ளிட்ட 8 பேர் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.19ஆம் தேதி திரையரங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அரசு -தனியார் நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிக்கல், மளிகை கடைகள் போன்றவை வழக்கம்போல் இயங்கும் என்பதால் மக்கள் கவலைப்பட வேண்டாம்.
கடந்த நிதியாண்டில் 14 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் தயாரித்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மொத்த தயாரிப்பில் 14% ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்களில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஏறக்குறைய 67% போன்களையும், பெகாட்ரான் கார்ப் நிறுவனம் 17% போன்களையும் தயாரித்துள்ளன. இதனிடையே, தமிழ்நாட்டின் ஓசூரில் மற்றொரு ஆலை நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில், RCB வீரர் மேக்ஸ்வெல் பெரியளவில் ஜொலிக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். நடந்து முடிந்த 5 போட்டிகளில், 0, 3, 28, 1, 0 என சொற்ப ரன்களே எடுத்துள்ளதால், அணியின் பேட்டிங் லைனில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மும்பைக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் தன்னை நிரூபிப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி மாநில பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ ராம்வீர் சிங் பிதுரி, சிறை நெறிமுறைகள் அவரை சிறையில் இருந்து ஆட்சி செய்ய அனுமதிக்காது. அதனால், அவர் உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். இல்லையெனில், சட்டம் தன் கடமையை செய்யும் என எச்சரித்தார்.
பெங்களூருவில் சுத்தமான ஆடை அணியாத இளைஞரை மெட்ரோ ரயிலில் ஏற அதிகாரிகள் அனுமதி மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டையின் மேல் பட்டன் அணியும்படி அறிவுறுத்திய அதிகாரிகள், சுத்தமான ஆடை அணிந்து வரும்படி வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த நபர் போதையில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகித்ததாகவும், பிறகு அனுமதித்ததாகவும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2 வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 5 நாளுக்கு வெப்பநிலை 2 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. மேலும், நாளை தென் தமிழகம், டெல்டா, அதையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஏப்.13 முதல் 3 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
செல்போனுக்கு அழைக்கும் நபரை அடையாளம் கண்டுபிடிக்க புதிய இணையதள பக்கத்தை ட்ரூ காலர் அறிமுகம் செய்துள்ளது. ட்ரூ காலர் செயலி, ஆன்ட்ராய்டு தள இணையதள பக்கம் மட்டும் தற்போது உள்ளது. இந்நிலையில் அனைத்து ப்ரவுசர்களிலும் செயல்படும் இணையதள பக்கத்தை ட்ரூ காலர் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதை பயன்படுத்தி, செல்போனுக்கு அழைப்போரை அடையாளம் காண முடியும். இதில் குறுந்தகவல் வசதியும் உள்ளது.
Sorry, no posts matched your criteria.