India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை அறிய குறைந்த விலை ஸ்மார்ட்போன்களையாவது பெற்றோர் வாங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கல்விக்காக முன்னெடுக்கும் இத்திட்டம் வரவேற்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும், வாங்கும் சக்தி இல்லாததால் தான் நவீன காலத்திலும் ஏராளமான பெற்றோர் ஸ்மார்ட்போன் இல்லாமல் உள்ளனர். அப்படி இருக்க, ஏழை பெற்றோரை குறைந்த விலையிலாவது போன் வாங்க வற்புறுத்துவது சரியா?
தன்னை யாரும் மிரட்ட முடியாது என பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தோல்வி அடைந்தால் சிறை செல்ல நேரிடும் என்ற மோடியின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை என்ற அவர், 34 வயது இளைஞனை 75 வயது முதியவர் மிரட்டுகிறார் எனக் கூறினார். மேலும் பேசிய அவர், கடவுள் கிருஷ்ணர் கூட ஜெயிலில் தான் பிறந்தார் என்றார். முன்னதாக, தேர்தலுக்கு பிறகு பலர் சிறை செல்வார்கள் என மோடி பரப்புரையில் கூறினார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை நள்ளிரவு, இது தீவிர புயலாக மாறி வங்கதேசம் மற்றும் அதன் ஒட்டிய மேற்குவங்க கடற்கரையில் சாகர்தீவு அருகே கரையை கடக்க உள்ளது. அப்போது, மணிக்கு 120 கி.மீ., முதல் 135 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வகுப்புவாத கருத்துக்கள் பேசப்படுவதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மோடி பரப்புரைகளில் பிரிவினையை தூண்டிவிடும் பேச்சுக்களை தவிர்த்திருக்க வேண்டும் என்ற அவர், INDIA கூட்டணி நிச்சயம் 300 இடங்களில் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஜனநாயகத்தை காக்க பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உணவருந்தியதும் நடைபயிற்சி மேற்கொள்ளலாமா, கூடாதா என பலருக்கும் சந்தேகம் உள்ளது. இதற்கு உடல்நல மருத்துவர்கள் சில பரிந்துரைகள் அளித்துள்ளனர். உணவருந்திய பிறகு 10 நிமிடம் நடைபயிற்சி செய்யலாம், அவ்வாறு செய்வது செரிமானத்துக்கு நல்லது என்று அவர்கள் கூறியுள்ளனர். சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடைபயிற்சி செய்வது, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க வழி வகுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடரில் இருந்து நடிகை ஜிவி டிம்பிள் விலகியுள்ளார். சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாக தொடங்கிய இந்தத் தொடர், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதில், கதாநாயகி ஆனந்தியின் தோழி ரெஜினா கேரக்டரில் நடித்து வந்த டிம்பிள் தற்போது விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் விஜே கல்யாணி என்பவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் இறுதிப்போட்டியில் நிச்சயம் கோப்பையை வெல்லும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 3 சீசன்களாக ஹைதராபாத் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை என்று வருத்தப்பட்ட அவர், தற்போது இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளது புதிய உற்சாகத்தை தந்துள்ளதாக தெரிவித்தார். ஹைதராபாத் அணியின் குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இறுதிப்போட்டியை பார்ப்பதாகவும் கூறினார்.
58 தொகுதிகளில் இன்று நடைபெற்ற 6ஆம் கட்ட தேர்தலில் 59% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் 52.80%, ஹரியானா -58.06%, ஜம்மு & காஷ்மீர் -51.41%, ஜார்கண்ட் – 62.13%, டெல்லி – 54.32%, ஒடிசா-59.72%, உத்தரப் பிரதேசம் – 54.02%, மேற்கு வங்கம் – 78.19% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1இல் 57 தொகுதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா ஒரு சிறந்த இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை கூறிய கருத்தை, ஜெ.,வின் தோழி சசிகலா உட்பட அதிமுகவினர் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணாமலை பேச்சு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஜெ., மத நம்பிக்கை உடையவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, அதேசமயம், அவர் ஆட்சியில் அனைத்து மதத்திற்கும் சம மரியாதையை கொடுத்தார் என்று உறுதியாக கூறுகின்றனர்.
விசிக சார்பாக பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டுள்ளது. விசிக சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கும் விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பிரகாஷ் ராஜூக்கு அளிக்கப்படும் என திருமாவளவன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். சென்னையில் நடைபெற்ற விழாவில், இன்று அவருக்கு விருது வழங்கப்பட்டது. அம்பேத்கரிய கருத்துக்களை பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.