News May 26, 2024

மோடி இனி மன்னரல்ல.. தெய்வ குழந்தை!

image

பிரதமர் மோடியை நாம் இனி மன்னர் எனக் கூற முடியாது, அவர் தெய்வக் குழந்தையாகிவிட்டார் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். விசிக விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், பிரதமரால் நாட்டுக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டால் அவரை திட்ட முடியாது. தெய்வம் மக்களை சோதிக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். சமீபத்தில் கடவுள் தன்னை பூமிக்கு அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

News May 26, 2024

30 மணி நேரம் காத்திருந்தது சாமி தரிசனம்

image

வார விடுமுறையை முன்னிட்டு நேற்று திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதிகாலை 3 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சுமார் 46 ஆயிரத்து 486 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், இலவச தரிசனத்தில் 30 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வதாக தெரிவித்துள்ளது. கூட்டம் அதிகம் உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

News May 26, 2024

நாட்டிலேயே அதிகபட்ச வெப்பம் பதிவானது

image

தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், வட இந்தியாவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வட இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்த நிலையில், நேற்று நாட்டிலேயே அதிகபட்ச வெப்பம் ராஜஸ்தானில் (50 டிகிரி செல்ஸியஸ்) பதிவாகியுள்ளது. வரும் நாள்களில் இது மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News May 26, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶மே – 26 ▶வைகாசி – 13 ▶கிழமை: ஞாயிறு ▶திதி: துவிதியை ▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 03:30 – 04:30 வரை ▶கெளரி நல்ல நேரம்: காலை 01:30 – 02:30 வரை, இரவு 01:30 – 02:30 வரை ▶ராகு காலம்: மாலை 04:30 – 06:00 வரை ▶எமகண்டம்: மதியம் 12:00 – 01:30 வரை ▶குளிகை: மாலை 03:00 – 04:30 வரை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ திதி: த்ரிதியை
▶ பிறை: தேய்பிறை

News May 26, 2024

ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

image

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் சிறப்பு ரயிலும், நெல்லை – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலும் மே கடைசி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயில்கள் சேவை ஜூன் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து காலை 8:05க்கு கிளம்பும் இந்த ரயில் நாகர்கோவிலை இரவு 8:55க்கு அடையும். நெல்லையில் இருந்து மாலை 4:35க்கு கிளம்பி மறுநாள் காலை 4:10க்கு தாம்பரம் வந்தடையும்.

News May 26, 2024

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

image

இன்றைய காலத்தில் இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதய நோயின் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் மூலம் இதை கட்டுப்படுத்தலாம். தக்காளி மற்றும் பீட்ரூட்டில் வைட்டமின் ஏ, பி, சி உள்ளதால், இதை சாப்பிடுவதன் மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகள் தவிர்க்கப்படும். மேலும், சிகப்பு குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, செர்ரி போன்றவற்றை சாப்பிடுவதன் மூலமும் இதய நோய்களை கட்டுப்படுத்தலாம்.

News May 26, 2024

தொடரைக் கைப்பற்றியது வெட்ஸ் இண்டீஸ்

image

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்ற வெ.இண்டீஸ் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

News May 26, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

▶ மூன்று விஷயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது. சூரியன், சந்திரன் மற்றும் உண்மை. – புத்தர்
▶ ஒன்றை சிறப்பாக செய்ய நம்மால் முடிந்த அளவுக்கு உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதை கடைசி வரை கொடுக்க வேண்டும். – ஆபிரகாம் லிங்கன்
▶ பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய வேலை தட்டிக்கொடுப்பது மட்டும்தான். – விவேகானந்தர்

News May 26, 2024

அபுதாபி கோயிலில் சூப்பர் ஸ்டார்

image

‘வேட்டையன்’ படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த ரஜினிகாந்த் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் சென்ற அவர், அங்கு புதிதாக கட்டப்பட்ட பிஏபிஎஸ் இந்து கோயிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்தார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிஏபிஎஸ் இந்து கோயிலை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி திறந்துவைத்து குறிப்பிடத்தக்கது.

News May 26, 2024

ஜனநாயகத்திற்கான தோனியின் சிக்ஸர்

image

டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களின் 58 தொகுதிகளுக்கு நேற்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ராஞ்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தோனி வாக்களித்தார். அந்தப் புகைப்படத்தை X தளத்தில் பகிர்ந்துள்ள தேர்தல் ஆணையம் “Thala for a reason தோனி தனது குடும்பத்துடன் வாக்களித்து ஜனநாயகத்திற்காக சிக்ஸர் அடித்தார்” என குறிப்பிட்டுள்ளது. இதை தோனி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!