India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘ரெமல்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. வங்கதேசத்தில் இருந்து 290 கிலோ மீட்டர் தெற்கு-தென் மேற்கில் நிலை கொண்டுள்ளது ரெமல் புயல். இப்புயல் இன்று இரவு வங்கதேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது 120 கிமீ., வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் மீது அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், தேர்தல் முடிவுக்கு பிறகு பூகம்பம் வெடிக்கலாம் எனவும் செய்தி வெளியானபடி உள்ளது. மக்களவைத் தேர்தலில் 10 இடங்களிலாவது அதிமுக வெல்ல வேண்டும், அதன்மூலம் தனது பதவியை தக்க வைக்கலாம் என நம்புகிறார் இபிஎஸ். ஒருவேளை, அதிமுக தோல்வியை சந்திக்கும் நிலை வந்தால், கட்சிக்குள் அவருக்கு நெருக்கடி ஏற்படும் எனப் பேசப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றிலேயே, அதிக சிக்சர்கள் (1251) பதிவாகியது நடப்பு ஐபிஎல் தொடரில் தான். அதேபோல், ஒரு ஐபிஎல் தொடரில் எந்தவொரு அணியும் 150 சிக்சர்களை இதுவரை அடித்ததில்லை. ஆனால், இந்த சீசனில் ஹைதராபாத்- 175, பெங்களூரு- 165 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்தன. கொல்கத்தாவில் நடைபெற்ற KKR-PBKS இடையேயான ஐபிஎல் போட்டியில், 42 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. இதுவே அதிக சிக்சர்கள் பதிவான ஐபிஎல் போட்டியாகும்.
ஐபிஎல் வரலாற்றில், அதிகமுறை 200 ரன்களுக்கு மேலும் (41 முறை), அதிகமுறை 250 ரன்களுக்கு மேலும் (8 முறை) அடிக்கப்பட்டது நடப்பு சீசனில் தான். 2013இல் RCB அணி 263/5 ரன்கள் குவித்ததே, அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதையும் இந்த சீசனில், RCB-க்கு எதிரான போட்டியில் 287/3 ரன்கள் குவித்து SRH அணி முறியடித்தது. குறிப்பாக, ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 500 ரன்கள் குவித்ததும் இந்த சீசனில் தான்.
மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய 17ஆவது சீசன் ஐபிஎல் தொடர், இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த சீசனின் முதல் 9 போட்டிகளிலும், சொந்த ஊர் மைதானங்களில் ஆடிய அணிகளே வெற்றி பெற்றன. இதுவரை எந்தவொரு ஐபிஎல் சீசனிலும் இப்படி நடந்தது கிடையாது. அதேபோல், CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து எம்.எஸ்.தோனி விலகினார். 15 வருடங்களாக சென்னை அணியை வழிநடத்தி வந்த அவர், இத்தொடரில் சாதாரண வீரராக களமிறங்கினார்.
ஜியோ சினிமா OTT தளத்துக்கான ஓராண்டு சந்தா ₹999ஆக இருந்து வந்தது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துவந்த நிலையில், அதற்கு பதிலாக சில புதிய திட்டங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு ₹299 சந்தா முறை ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் ஒரு திரையில் மட்டுமே ஜியோ சினிமாவை காண முடியும்.
திருவள்ளுவரின் சிலைக்கு காவி துணி அணிவிப்பதும், காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற படத்தை அச்சிட்டு விநியோகிக்கும் செயலிலும் பாஜகவினர் அண்மைகாலமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர் மாளிகை அழைப்பிதழிலும் இதே நிலையே காணப்பட்டது. திருக்குறளில் எங்கும் திருவள்ளுவர் மதத்தை வெளிப்படுத்தாத நிலையில், அவருக்கு மதசாயம் பூசுவது சரியா என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
‘அமரன்’ படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, படத்தில் பணியாற்றிய அனைத்து துணை இயக்குநர்களுக்கும் சிவகார்த்திகேயன் பரிசளித்துள்ளார். முன்னதாக, படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்த அவர், நேற்று விலையுயர்ந்த ‘ஃபாசில்’ வாட்சை பரிசாக வழங்கியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படம், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்றும், விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் சில காட்சிகளை, நடிகர் அஜித் பார்வையிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. காட்சிகளை பார்த்த அவர் பிரமித்து போனதாகவும், இயக்குநர் சிறுத்தை சிவாவை பாராட்டியதோடு விரைவில் அவருடன் இணைந்தது படம் பண்ண உள்ளதாகவும் கூறப்படுகிறது. கங்குவா படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதோடு, தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்று அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா ஆன்மிகவாதிதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்துத்துவா ஆதரவாளரா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி. ஏனெனில், காஞ்சி சங்கராச்சாரியாரை எந்தவித தயக்கமும் இல்லாமல் கைது செய்தவர் ஜெயலலிதா. ஒரு இந்துத்துவா தலைவர் இதனை செய்திருப்பாரா என்று யோசிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.