News April 11, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியதால், பொதுமக்கள் கிறுகிறுத்துப் போயிருக்கிறார்கள். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,725க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.88.50க்கும், கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.88,500க்கும் விற்பனையாகிறது.

News April 11, 2024

பணம் கொடுக்கும் வேட்பாளர்க்கு 10 ஆண்டு தடை

image

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு 10 ஆண்டு தடை விதிக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் இருந்துதான் ஊழல் விதை ஊன்றப்படுகிறது என்றார். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்க்கு 10 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும், அப்படி செய்தால் யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள் என்றும் சீமான் குறிப்பிட்டார்.

News April 11, 2024

விஜய் அரசியலுக்கு வர யார் காரணம் ? (1)

image

ஹிட் படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்த விஜய், திடீரென தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். திரைத்துறையில் அவரின் தந்தை சந்திரசேகர் இருந்ததால், எளிதில் விஜய்யால் அறிமுகமாக முடிந்தது. ஆனால் அரசியலில் எந்த பின்னணியும் இல்லாமல் சாதிப்பது அரிதாகும். விஜய்யின் தந்தை சந்திரசேகர், திமுகவில் இருந்த காரணத்தால் அவரின் தாக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.

News April 11, 2024

விஜய் அரசியலுக்கு வர யார் காரணம்? (2)

image

கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஆட்சியிலிருந்தபோது குருவி படத்தில் நடித்த விஜய்க்கும், தயாரிப்பு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்டுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் அடுத்த தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் ஆதரவு தெரிவித்தார். பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தலைவா பட பிரச்னை ஏற்பட்டது. இந்த 2 பிரச்னைகளாலும் அரசியல் கட்சியை தொடங்கும் முடிவை அவர் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

News April 11, 2024

விஜய் அரசியலுக்கு வர யார் காரணம்? (3)

image

நடிகர் விஜயகாந்த் தேமுதிகவைத் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவரானார். கமல்ஹாசன், மநீம கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இயக்குனரும், நடிகருமான சீமான், நாம் தமிழர் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இதுபோல அரசியலில் பிரபல நடிகர்கள் தடம்பதித்ததும், செல்வாக்கு பெற்றதையும் கண்ணாரக் கண்டவர் விஜய். இந்த 3 பேரும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க ஒரு உத்வேகமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

News April 11, 2024

விஜய் அரசியலுக்கு வர யார் காரணம்? (4)

image

நடிகர் விஜய், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். படத்தில் நடித்த உதயநிதி, அரசியலுக்கு வந்து அமைச்சராகி விட்டார். முதல்வருக்கு அடுத்த அதிகாரமையமாக அவர் தற்போது உள்ளார். இதுபோல தன்னுடன் கல்லூரியில் படித்தவரும், தனக்கு பிறகு திரைத்துறைக்கு வந்தவருமான உதயநிதி ஸ்டாலின், அரசியலில் சாதித்து வருவதும் விஜய் அரசியல் கட்சியை தொடங்க ஒரு காரணமாக கூறப்படுகிறது.

News April 11, 2024

விஜய் அரசியலுக்கு வர யார் காரணம்? (5)

image

திரைத்துறையில் சாதித்தவர்கள், அரசியலுக்கு வருவது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இதற்கு கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர், விஜயகாந்த் உள்ளிட்டோரை உதாரணமாக கூறலாம். ஏதேனும் ஒரு உத்வேகத்தாலோ, காரணத்தாலோ இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம். அந்த வரிசையில் விஜய்யும் இணைந்துள்ளார். அரசியலுக்கு வந்தததற்கு பல காரணம் ஊகமாக கூறப்பட்டாலும், உண்மையான காரணத்தை அவர் மட்டுமே அறிவார்.

News April 11, 2024

தேமுதிகவின் நம்பிக்கைக்குரிய தொகுதி இதுதான்

image

தேமுதிகவின் நம்பிக்கைக்குரிய தொகுதியாக விஜய பிரபாகரன் போட்டியிடும் விருதுநகர் தொகுதி பார்க்கப்படுகிறது. மறைந்த விஜயகாந்தின் பூர்வீக ஊர் என்பதால், அங்கு விஜய பிரபாகரன் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே உள்ள அனுதாப அலை, அதிமுகவினரின் முழு ஒத்துழைப்பு, பாஜக எதிர்ப்பு போன்ற காரணங்களால், விருதுநகரில் தேமுதிக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

News April 11, 2024

₹1000.. பெண்களுக்கு GOOD NEWS

image

தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், மகளிர் உரிமைத்தொகை ₹1000 இம்மாதம் வழங்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதால், இதுவரை வாங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ₹1000 வந்துவிடும்; புதியவர்களுக்கு வராது. இத்திட்டத்தில் விடுபட்டவர்களை இணைக்கும் வகையில் தேர்தல் முடிந்த உடன் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

News April 11, 2024

ரோமியோ, டியர் படங்கள் இன்று வெளியீடு

image

விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடித்துள்ள ‘ரோமியோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி முதல் முறையாக ரொமான்டிக் ஹீரோவாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘டியர்’, கார்த்தி, தமன்னா நடித்த ‘பையா’ ரீ-ரிலீஸ், ஃபகத் பாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’, பிரணவ் மோகன்லால் நடித்துள்ள ‘வருஷங்களுக்கு ஷேஷம்’ ஆகிய படங்களும் திரைக்கு வந்துள்ளன.

error: Content is protected !!