India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற பாயல் கபாடியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், பாயலின் திறமை உலக அரங்கில் பிரகாசிப்பதாகவும், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ என்ற படைப்புக்காக இந்தியா பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விருது அவரது தனிப்பட்ட திறமைகளை கெளரவிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இயக்குநர்களையும் ஊக்கமளிப்பதாக கூறியுள்ளார்.
நாட்டை காக்க பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறியுள்ளார். சாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்த பாஜக முயல்வதாக குற்றம் சாட்டிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து என்றார். நாட்டில் அனைத்து ஜனநாய அமைப்புக்களையும் பாஜக அவமதித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கணித்துள்ளார். ஐபிஎல் சீசன் முழுவதும் கொல்கத்தா அணியினர் சிறப்பாக விளையாடியதாக கூறிய அவர், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி போன்ற மிகச் சிறந்த ஸ்பின்னர்கள் அந்த அணியில் உள்ளதாக தெரிவித்தார். ஆண்ட்ரே ரஸல் போன்ற அதிரடி வீரரும் அணியில் இருப்பதால் KKR நிச்சயம் கோப்பையை வெல்லும் என்றார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூரில் கோயிலில் சாப்பிட்ட எச்சில் இலையில், பக்கதர்கள் படுத்து உருண்டு வழிபாடு நடத்த, கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்ற தடை இருந்த நிலையில், அதை நீக்கி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று, கொளத்தூர் மணி மற்றும் கு.ராமகிருஷ்ணன் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. இதில் சிவகார்த்திகேயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது, பின்னர் அதுபற்றி அப்டேட் எதுவும் வரவில்லை. இந்நிலையில், கூலி படக்குழு மற்றும் லோகேஷை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் கூலி படத்தில் சிவகார்த்திகேயன் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை பாக்., கேப்டன் பாபர் ஆசாம் முறியடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 32 ரன்கள் எடுத்த பாபர், டி20 போட்டியில் (3987) அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருந்த வந்த ரோஹித்தின் (3974) சாதனையை முறியடித்து, 2ஆம் இடத்திற்கு முன்னேறினார். முதலிடத்தில் விராட் கோலி (4037) உள்ளார்.
ரேஷன் கடைகளில், அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களை சில ஊழியர்கள் வெளியில் விற்பதாகவும், கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் எடை குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இதனை தடுக்கும் பொருட்டு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் திடீர் ஆய்வு நடத்தினர். இதில், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதிய கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் அரசு வெளியிடாமல் இருப்பதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தியதாக குற்றம்சாட்டிய அவர், பள்ளி மாணவர்களின் எதிர்பார்ப்பை, இந்த ஆண்டாவது அரசு நிறைவேற்ற முன்வருமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு கலைஞனாக சமுதாய கருத்துள்ள படைப்புகளை கொடுக்கவே விரும்புவதாக ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். நெல்லை தீபக் ராஜா கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்ற அவர், தான் எப்போதும் ஆணவக் கொலைக்கு எதிரானவன் என்றார். ஆணவக் கொலைக்கு எதிராக தான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே பாடல் எழுதியதாகவும் தெரிவித்தார். தீபக் ராஜா கொலை பற்றி இயக்குநர் பா.ரஞ்சித் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
INDIA கூட்டணி ஆட்சியமைந்ததும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஜுலை 5இல் ₹8,500 வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், INDIA கூட்டணி அரசமைந்ததும் ஏழைக் குடும்பங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்படும், அதில் பெண் பெயர் தேர்வு செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் ஜுலை- டிசம்பர் வரை பணம் வரவு வைக்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.