News May 26, 2024

310 இடங்களில் மோடி வென்றுவிட்டார்: அமித் ஷா

image

மக்களவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பாஜக பெற்றுவிட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். பிஹாரில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளதாகவும், 5 கட்டத் தேர்தலிலேயே ஆட்சி அமைக்க தேவையான 310 இடங்களை மோடி பெற்றுவிட்டதாகவும் கூறினார். மேலும், 6, 7ஆவது கட்ட தேர்தல்களில் 400 சீட்களை கடந்து விடுவார் என்றும் அவர் சூளுரைத்தார்.

News May 26, 2024

அடுத்தடுத்த விக்கெட்டுகளால் தடுமாறும் SRH அணி

image

KKRக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற SRH அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா (2) கிளீன் போல்டு ஆனார். வைபவ் அரோரா வீசிய இரண்டாவது ஓவரில் டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் ஆனார். தொடர்ந்து, ஸ்டார்க் வீசிய 5வது ஓவரில் திரிபாதி (9) அவுட் ஆனார். 7வது ஓவரில் ஹர்ஷித் வீசிய பந்தில் நிதிஷ் (13) அவுட் ஆனார். தொடர்ந்து அந்த அணி 47/4 (7) ரன்களை பெற்றுள்ளது.

News May 26, 2024

மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?

image

சமீப காலமாக யூடியூபர்களை கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் கல்வி, தொழில்துறையில் சிறந்த ஆளுமைகளையே சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து பேச வைப்பாளர்கள். அவர்களிடம் இருந்து நல்ல கருத்துகள் மாணவர்களுக்கு கிடைக்கும். ஆனால், இதுபோல யூடியூபர்கள் அழைத்து பேச வைப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு எந்த வகையில் உதவும்? என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

News May 26, 2024

மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

image

‘ரெமல் புயல்’ முன்னெச்சரிக்கை தொடர்பாக, டெல்லியில் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வங்கக் கடலில் உருவான ரெமல் புயல், இன்று நள்ளிரவு வங்கதேசம்-மேற்குவங்கம் இடையே கரையை கடக்கிறது. முன்னெச்சரிக்கையாக கொல்கத்தாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புயல் கரையை கடந்தப்பின் செய்ய வேண்டிய மீட்புப் பணிகள் தொடர்பாக, அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசித்து வருகிறார்.

News May 26, 2024

இறுதிப் போட்டியில் அசத்தும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள்

image

சேப்பாக்கத்தில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியின் வீரர்களே ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளனர். 2011இல் ஆர்சிபிக்கு எதிராக சென்னை அணியின் முரளி விஜய் (95 ரன்கள்) எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதை போல 2012இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மன்வீந்தர் பிஸ்லா (89 ரன்கள்) குவித்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானார்.

News May 26, 2024

இலங்கை அரசியல் களத்தில் மீண்டும் ராஜபக்ச சகோதரர்கள்

image

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு எதிராக மக்கள் 2022ஆம் ஆண்டில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில், தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ள அவர்கள், இன்று மாலை எஸ்எல்பிபி கட்சி மாநாட்டில் பங்கேற்று அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளனர்.

News May 26, 2024

தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது

image

தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹைதராபாத்தில் இருந்து குண்டூருக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, விஷ்ணுபுரம் ரயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென தடம் புரண்டது. இதில், 6 பெட்டிகள் வரை தடம் புரண்டுள்ளதால் பயணிகள் ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ரயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 26, 2024

ஆல்-ரவுண்டர்கள் இந்திய அணிக்கு தேவை

image

உலகக் கோப்பைக்கு பிறகு ருதுராஜ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று நியூசி., முன்னாள் வீரர் சைமன் டவுல் கூறியுள்ளார். இந்திய அணியில் முதல் 6 வீரர்களில் பவுலர்கள் என்று யாரும் இல்லாதது அணிக்கு பின்னடைவு என்ற அவர், 2 அல்லது 3 ஆல்-ரவுண்டர்கள், கணிசமாக பேட்டிங் செய்ய கூடிய பவுலர்கள் தேவை என்றார். அபிஷேக் சர்மா போன்ற ஆல் – ரவுண்டர்களை அதிகம் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

News May 26, 2024

ராணுவ தலைமை தளபதி பதவிக்காலம் நீட்டிப்பு

image

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மே 31ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைய இருந்த சூழலில், ஜூன் 30ஆம் தேதி வரை பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டார்.

News May 26, 2024

டாஸில் பெற்ற வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்கும் SRH

image

2024 ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. சரியாக இரவு 7 மணிக்கு, KKR கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் டாஸை சுண்டிவிட, SRH கேப்டன் கம்மின்ஸ், ஹெட்ஸ் (தலை) கேட்டார். அவர் கேட்டது போலவே, ஹெட்ஸ் விழுந்தது. இதன் மூலம், டாஸில் கிடைத்த வெற்றியுடன் SRH அணி பேட்டிங் செய்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!