India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10 ஆண்டில் 22 தொழிலதிபர்களின் கடனை ரத்து செய்த பிரதமரால், ஹிமாச்சலுக்கு பருவமழை நிவாரணம் கொடுக்க முடியவில்லை என ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அவர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வழங்கப்படும் என்றார். புதிய ஆட்சியில் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பாக்., எதிரான T20 தொடரை விட இங்கிலாந்துக்கு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக இருக்கும் என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். பாக்., அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இங்கி., வீரர்கள் தாயகம் திரும்பினர். இது தொடர்பாக பேசிய வாகன், “ஐபிஎல் தொடரில் தரம், எதிர்பார்ப்பு, ரசிகர் கூட்டம் அதிகம் இருக்கும் என்றும், இங்கி., வீரர்களுக்கு அது சிறந்த பயிற்சியாக இருக்கும்” என்றார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள சுரானா ஜுவல்லர்ஸ் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் ₹26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகைக் கடை, ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களில் சுரானா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று காலை முதல் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள கோமல் ஷர்மாவுக்கு, UAE அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது. சட்டப்படி குற்றம், வைகை எக்ஸ்பிரஸ் உள்பட, பல தமிழ் படங்களில் நடித்தவர் கோமல் ஷர்மா. இந்நிலையில், பொழுதுபோக்குத் துறையில் அவரது திறமை, அர்ப்பணிப்பை போற்றும் வகையில், கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளதாக UAE அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஜினி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணிக்கு 114 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஹைதராபாத் அணி. சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய SRH அணி வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக, அபிஷேக், டிராவிஸ் ஹெட், திரிபாதி, ஷபாஸ் அஹமது, அப்துல் ஷமத், உனத்கட் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். KKR தரப்பில் ரஸ்ஸல் 3, ஸ்டார்க், ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இளம் பெண்களிடையே புகைப்பழக்கம் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புகையிலை நுகர்வு குறித்த அந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் இப்பழக்கம் இளம் பெண்களிடையே அதிகரித்துள்ளதாகவும், வயதான பெண்கள் புகைப்பிடிப்பது குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது அவர்கள் கருவுறுதலை பாதிக்கும் என்றும், பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
தனுஷின் ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், ஒரு நடிகரின் திரைப் பயணத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டுமே அழுத்தமானதாக அமையும் என்றும், ‘கொக்கி குமார்’ அதுபோன்ற ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்த செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்த அவர், ‘கொக்கி குமார்’ என்றால் எமோஷன் என்றும் பதிவிட்டுள்ளார்.
கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என்றார். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி பரிதாப நிலையில் உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில், டாஸ் வென்ற கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய SRH வீரர்கள் அபிஷேக், டிராவிஸ் ஹெட், திரிபாதி, சபாஷ் அஹமது, அப்துல் சமத் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். KKR தரப்பில் ஸ்டார்க், ரஸ்ஸல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. இதனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.