News April 11, 2024

இதை தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்

image

பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும், அவர்களால் தேர்தலில் வெல்ல முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், மதவாத அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றார். பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News April 11, 2024

மோசமான சாதனையில் மேக்ஸ்வெல் முதலிடம்

image

மும்பை – பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் ஒரு மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் டக் அவுட்டான RCB வீரர் மேக்ஸ்வெல், ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக்குடன் முதல் இடத்தில் இணைந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து ரஷித் கான், பியூஷ் சாவ்லா, நரைன், மந்தீப் சிங் 15 முறை டக் அவுட்டாகியுள்ளனர்.

News April 11, 2024

ஆட்டம் காண வைக்கவே ஆட்டோவில் பரப்புரை

image

தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களை ஆட்டம் காண வைக்கவே ஆட்டோவில் பரப்புரை மேற்கொள்வதாக பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆட்டோவில் பரப்புரை செய்த அவர், “மக்களோடு இருப்பது தான் எனக்கு வசதி. ஆளுநராக இருந்த போது கிடைத்த வசதிகளை விட்டு வந்துள்ளேன்” என்றார். தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை, தேர்தலில் போட்டியிட பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

News April 11, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

image

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு விலையில்லா சர்க்கரை, அரிசி, கோதுமை, பருப்பு போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த குற்றச்சாட்டையடுத்து, தகுதியற்ற பலரின் பெயரை அரசு நீக்கியது. இவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது நீக்கப்பட்டவர்களுக்கும் இலவச பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

News April 11, 2024

பிரதமர் மோடி பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்

image

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டுமென அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “தேர்தல் பிரசாரங்களில் மோடியின் பேச்சு முழுக்க முழுக்க மதத்தையும், சாதியையும் முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக அமைத்திருக்கிறது. எனவே மோடி மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

News April 11, 2024

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பா?

image

பெங்களூருவில் குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இதே நிலை நமக்கும் ஏற்படுமா என்ற அச்சம் சென்னைவாசிகள் இடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் 57% மட்டுமே நீர் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலம் உச்சத்தை தொடும் நிலையில், நீர் இருப்பு 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னைக்கு அடுத்த 4 மாதங்களுக்கு போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News April 11, 2024

ஐந்து விக்கெட்டுகளை அள்ளிய பும்ரா

image

RCBக்கு எதிரான IPL போட்டியில் MI வீரர் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதலில் கோலியை அவுட்டாக்கிய அவர், தான் வீசிய 3ஆவது ஓவரில் தொடர்ந்து 2 விக்கெட்டுகள், 4ஆவது ஓவரில் தொடர்ந்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி, இருமுறை ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பை இழந்தார். இந்த போட்டியில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அதிக விக்கெட்டுக்கான பர்ப்பில் தொப்பியும் கைப்பற்றினார்.

News April 11, 2024

மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு

image

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 196/8 ரன்கள் குவித்துள்ளது. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், டு ப்ளஸி 61, படிதார் 50 ரன்கள் அடித்தனர். கடைசியில் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53* ரன்கள் குவித்தார். மும்பை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News April 11, 2024

ஆடு, மாடு வாங்க போகும் விவசாயிகளை பிடிக்கிறார்கள்

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 50% வியாபாரம் குறைந்து விட்டதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். பறக்கும் படை அதிகாரிகள் அரசியல் கட்சிகளை கண்காணிப்பதில்லை. அவர்களின் பணப்பட்டுவாடா ஒரு புறம் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். மாறாக ஆடு, மாடு வாங்கச் செல்லும் விவசாயிகளையும், வியாபாரிகளையும்தான் அவர்கள் பிடிப்பதாக விமர்சித்துள்ளார்.

News April 11, 2024

வானில் வெடித்து சிதறப்போகும் நட்சத்திரம்

image

வானில் நிகழும் அரிய நிகழ்வுகளை காண மக்கள் எப்போதும் ஆர்வம் கொண்டிருப்பர். அந்த வகையில், இறந்த வெண் குறுமீன் மற்றும் ரெட் ஜெயண்ட் உள்ளடக்கிய அமைப்பு நடப்பு ஆண்டு வெடித்து சிதற காத்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியில் இருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கொரோனா பொரியாலிஸ் என்ற அமைப்பு செப்டம்பருக்கு முன்னதாக வெடித்து சிதறவுள்ளது. இந்த நிகழ்வை தொலைநோக்கி இன்றி வெறும் கண்ணால் காணலாம்.

error: Content is protected !!