News April 12, 2024

BREAKING: கைதாகி சிறைக்கு செல்லும்போது நெஞ்சுவலி

image

திண்டுக்கல், பழனி அருகே சத்துணவு பெண் பணியாளருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கர்நாடகாவில் பதுங்கி இருந்த பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். இன்று சிறைக்கு கொண்டு சென்றபோது, அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவரை போலீசார், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

News April 12, 2024

என்னாது தேர்தல் தேதி மாறிவிட்டதா?

image

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள், தங்களது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பரமும் செய்கின்றன. காங்., சார்பில் செய்யப்பட்ட சுவர் விளம்பரத்தில் கை சின்னத்துடன் “தேர்தல் 19.4.23” என எழுதப்பட்டுள்ளது. இதைப்பார்த்த எதிர்தரப்பினர், தேர்தல் நாளையே காங்., கட்சி மாற்றிவிட்டதாக கிண்டல் செய்கின்றனர்.

News April 12, 2024

IPL: நடுவர்களால் எழுந்த சர்ச்சை

image

MI-RCB இடையேயான ஐபிஎல் போட்டியில், நடுவர்கள் ஒருதலை பட்சமாக இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. பவர் பிளேவில் பெங்களூரு அணி அடித்த பவுண்டரியை ரிவியூ செய்யவில்லை. மும்பை அணி 2 ரிவியூக்களை இழந்த போதிலும், 3ஆவது நடுவரிடம் ரிவியூ கேட்கப்பட்டது. இடுப்புக்கு மேல் போன பந்திற்கு No Ball கொடுக்கவில்லை. இவ்வாறு பல சர்ச்சைகள் எழுந்ததால், நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக செயல்பட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.

News April 12, 2024

தமிழக அரசு, சிஏஜி இடையே மோதல் (1)

image

மத்திய கணக்கு தணிக்கை (சிஏஜி) அலுவலக ஆடிட்டர் ஜெனரலை திருப்பியதால், அந்த அமைப்புக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. கணக்கு தணிக்கைக்காக சிஏஜியால் அனுப்பப்பட்ட மூத்த அதிகாரியான ஜெய்சங்கரை அவரது பணிக்கே மீண்டும் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தமிழக அரசு திருப்பி அனுப்பி உத்தரவிட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், சிஏஜி உடனடியாக தலையிட வலியுறுத்தியும் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

News April 12, 2024

தமிழக அரசு, சிஏஜி இடையே மோதல் (2)

image

ஆடிட்டர் ஜெனரல் ஜெய்சங்கரை அவரது பணிக்கே திருப்பி அனுப்பி உத்தரவிட்டது குறித்த கேள்விக்கு, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியபோது, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023 விதிகளுக்கு எதிராக ஜெய்சங்கர் சில உத்தரவுகளை பிறப்பித்ததாகவும், அதனாலேயே ஜெய்சங்கரை திருப்பி அனுப்பி உத்தரவிட்டதாகவும் உதயசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

News April 12, 2024

தங்கம் விலை ரூ.54 ஆயிரத்தை கடந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ரூ.54 ஆயிரத்தை கடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,805க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.90க்கும், கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 உயர்ந்து ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News April 12, 2024

மகளிர் உரிமைத் தொகை: திமுகவுக்கு வாக்குகளாகுமா?

image

அதிமுகவின் வாக்கு வங்கியாக மகளிர் கருதப்படுகின்றனர். ஜெயலலிதா மறைவால், அந்த வாக்குகள் கடந்த தேர்தலில் திமுகவுக்கு சென்றதே அக்கட்சியின் வெற்றிக்கு காரணமென கூறப்படுகிறது. அந்த வாக்குகளை தக்க வைக்கவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், உரிமைத் தொகை திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியதாக நம்பப்படுகிறது. அந்தத் திட்டங்கள், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை.

News April 12, 2024

டிஜிட்டல் சேவை ஏற்றுமதியில் 4ஆம் இடத்தில் இந்தியா

image

உலகளவில் டிஜிட்டல் சேவை ஏற்றுமதியில், 4ஆவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் ‘உலகளாவிய வர்த்தக கண்ணோட்டம் & புள்ளியியல்’ அறிக்கையில், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023இல் டிஜிட்டல் சேவை ஏற்றுமதியில், இந்தியா 17% வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் மதிப்பு ₹21.42 லட்சம் கோடியாகும். இத்துறையில், சீனா 4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News April 12, 2024

சற்றுமுன்: பாஜகவில் இருந்து விலகல்

image

மகாராஷ்டிராவின் பாஜக தலைவர் தைரியஷீல் மோஹிதே பாட்டீல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். மாதா தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால், கட்சியில் இருந்து விலகிய அவர், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

News April 12, 2024

முதல் தேர்தலில் பாஜக எத்தனை தொகுதி வென்றது தெரியுமா?

image

1980இல் துவங்கப்பட்ட பாஜகவின் முதல் தலைவராக வாஜ்பாய் இருந்தார். இதையடுத்து அக்கட்சி முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் 1984இல் போட்டியிட்டது. இதில் அக்கட்சி வெறும் 2 தொகுதிகளில் வென்றது. குஜராத்தில் ஏ.கே. பாட்டீல் என்பவரும், ஆந்திராவில் ஜங்கா ரெட்டி என்பவரும் வென்றனர். இதுபோல 2 தொகுதிகளில் மட்டுமே வென்று கணக்கை ஆரம்பித்து, தற்போது 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியமைத்துள்ளது.

error: Content is protected !!