News April 12, 2024

அமித் ஷாவின் திருமயம் பயணம் ரத்து

image

மழை காரணமாக புதுக்கோட்டை திருமயத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கோயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணிக்கு திருமயம் கோட்டையில் உள்ள கால பைரவர் கோயிலுக்கு அவர் செல்வதாக இருந்தது. இதனிடையே திருமயம் பகுதியில் மழை தொடர்வதால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாதென கூறப்படுகிறது. இதனால் மதுரையில் நடைபெறும் ரோடு ஷோவில் மட்டும் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

News April 12, 2024

இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகள்

image

ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது இரும்புச்சத்து. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால் நோயெதிர்ப்பு மண்டலம் சீராக பராமரிக்கப்படும். அந்த வகையில், கீரைகள், நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள், பாசிப்பயிறு, சோயா, பீன்ஸ் உள்ளிட்ட பருப்பு வகைகள், மீன், டார்க் சாக்லேட் ஆகியவற்றை சாப்பிடலாம். இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் காஃபி, டீ மற்றும் பால் போன்ற உணவுகள் உதவுகின்றன.

News April 12, 2024

நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது

image

தமிழ்நாட்டு மக்களே தங்களுடைய கல்வி முறை, தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாமென ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நெல்லை பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது. I.N.D.I.A கூட்டணியை பொறுத்தவரை, நீட் தேர்வை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கே விடுகிறோம். மாநில அரசு வேண்டுமென்றால் வைத்து கொள்ளலாம். வேண்டாமென்றால் விட்டுவிடலாம்” என்றார்.

News April 12, 2024

முன்னணியில் இருக்கும் மாநிலங்கள்

image

இந்தியாவில் பொருளாதார அளவில் முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தின், உள் மாநில உற்பத்தியை (GSDP) வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை அளவிடலாம். அந்த வகையில் இந்தியாவின் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு, குஜராத், உ.பி., கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 7 இடங்களில் உள்ளன.

News April 12, 2024

ஆர்சிபி அணிக்கு கோலி மீண்டும் கேப்டன்

image

ஆர்சிபிக்கு கோலியை மீண்டும் கேப்டனாக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி எளிதில் வென்றது. அதிக ரன்கள் குவித்தும் ஆர்சிபி அணியால் வெல்ல முடியவில்லை. இதை சுட்டிக்காட்டி, ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில், டு பிளசிஸ் கேப்டனாக இருப்பதால் கோலியால் எதுவும் செய்ய முடியவில்லை, கோலியை கேப்டனாக்கினால் ஆர்சிபி போராடி வெல்லும் எனக் கூறியுள்ளார்.

News April 12, 2024

ரூ.18,000 கோடிக்கு பங்குகளை விற்கும் VI

image

இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாபோன் ஐடியா கடும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. 4ஜி அலைக்கற்றையை வாங்கியதில் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.16,000 கோடி நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ரூ.18,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான FPO வெளியீடு ஏப்ரல் 18 – 22ஆம் தேதி நடைபெறுகிறது. Price Band ரூ.10 – 11ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

தமிழ் எந்த வகையிலும் குறைந்த மொழியில்லை

image

இந்தியாவில் உள்ள மொழிகளை விட தமிழ் எந்த வகையிலும் குறைந்தது இல்லை என ராகுல் காந்தி பேசியுள்ளார். நெல்லையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், “இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது. ஒருபக்கம் பெரியார் போதித்த சமூக நீதி, சமத்துவம் போன்றவை இருக்கிறது. மற்றொரு பக்கம் மோடியைப் போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும், துவேஷமும் இருக்கிறது. மோடி ஒரே நாடு, ஒரே மொழி என சொல்கிறார்” என்றார்.

News April 12, 2024

விலகுவதாக அறிவித்தார் பாமக மாவட்ட செயலாளர்

image

கோயம்புத்தூர் தொகுதியில் பிரசாரப் பணிகள் செய்வதில் இருந்து விலகுவதாக பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளார். வரும் தேர்தலை பாஜக – பாமக கூட்டணியிட்டு சந்திக்கின்றன. கோவையில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடும் நிலையில், அவர்கள் பாமகவை மதிக்கவில்லை என்று கோவை ராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார். கூட்டணி தர்மத்தை விட சுய மரியாதைதான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 12, 2024

ஆதாரம் கேட்டதும் பின்வாங்கி விட்டது காங்கிரஸ்

image

மாட்டிறைச்சி சாப்பிட்டதற்கு ஆதாரம் கேட்டதும் காங்கிரசார் பின்வாங்கி விட்டதாக மன்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். மணாலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், தாம் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக காங்கிரசார் முதலில் கூறியதாகவும், ஆதாரம் கேட்டதும், அப்படி சொல்லவில்லை என பின்வாங்கி விட்டதாகவும், தனது குணநலன் குறித்த குற்றச்சாட்டிலும் இதேபோல் பின்வாங்கியதாகவும் குறிப்பிட்டார்.

News April 12, 2024

இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடி தமிழ்நாடு!

image

இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புதமான கண்ணாடியாக தமிழ்நாடு விளங்குவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நெல்லையில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், “தமிழ்நாட்டிற்கு வருவதற்கு நான் விரும்புகிறேன். தமிழக மக்கள் மீது அன்பு செலுத்துகிறேன். உலகிற்கு பெரியார், அண்ணா போன்ற ஆளுமைகளை தமிழ்நாடு தந்துள்ளது. தமிழ்நாட்டிற்கும் எனக்கும் அரசியலைத் தாண்டி குடும்ப உறவு உள்ளது” என்றார்.

error: Content is protected !!