News May 27, 2024

ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு

image

தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இம்மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இன்றும், நாளையும் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டில் உள்ள 48 பல்கலை., துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க அமர்வில் யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் சிறப்புரையாற்றுகிறார்.

News May 27, 2024

IPL: சாதனை ஒருபக்கம், வேதனை மறுபக்கம்

image

நீண்ட நாள் கேப்டனாக இருந்தும் ஐபிஎல் கோப்பையை வெல்லாத வீரர்களின் பட்டியலில் கோலி முதலிடத்தில் இருக்கிறார். 143 போட்டிகளில் கேப்டனாக இருந்த அவர், இதுவரை கோப்பையை வென்றதில்லை. இந்த பட்டியலில் 2ஆவது இடத்தில் 64 போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார். அதேப்போல் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 61 போட்டிகளில் கேப்டனாக இருந்தும், சாம்பியன் பட்டத்தை இதுவரை வென்றதில்லை.

News May 27, 2024

புனே விபத்து தொடர்பாக மேலும் இருவர் கைது

image

புனேவில் சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், ரத்த மாதிரிகளை மாற்றி வைத்து ஆதாரங்களை அழிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஓட்டுநரை மிரட்டி சரணடையச் செய்ததற்காக சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். செல்வாக்கு மிகுந்த சிறுவனைக் காப்பாற்ற எத்தனை பேர் உழைக்கிறார்கள் பாருங்கள்.

News May 27, 2024

கோலி மீது ராயுடு மீண்டும் விமர்சனம்

image

ஐபிஎல்லில் 741 ரன் குவித்து கோலி ஆரஞ்ச் தொப்பி வென்றுள்ளார். இதை மறைமுகமாக சிஎஸ்கே அணி முன்னாள் வீரர் ராயுடு விமர்சித்துள்ளார். ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள கொல்கத்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஆரஞ்ச் தொப்பி கோப்பையை வென்று தராது, 300 ரன்களே கோப்பையை கைப்பற்றித் தரும் எனக் கூறினார். சுயநலத்துக்காக கோலி விளையாடுவதாக அவர் ஏற்கெனவே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 27, 2024

பதிப்புரிமைத் தொகையில் வாழ்ந்த நேரு

image

ஆனந்தபவன் அரண்மனையில் இளவரசனாக பிறந்து, நாட்டின் அரசனாக வாழ்ந்து, துறவியாக இறந்தவர் நேரு. சுதந்திரப் போராட்டத்தில் இணைந்த பின், சாகும்வரை தான் எழுதிய புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகையை மட்டுமே தனது ஒரே வருமானமாக அவர் கொண்டிருந்தார். கோர்டு – சூட்டு, சொகுசு மாளிகை, தனி விமானப் பயணம் போன்ற உல்லாச வாழ்வை ஒதுக்கி, நாட்டை முன்னேற்ற உழைத்த நவீன இந்தியாவின் சிற்பி நேருவின் நினைவு தினம் இன்று!

News May 27, 2024

ஜியோ, ஏர்டெல், வோடஃபோனுக்கு அரசு உத்தரவு

image

இந்திய எண்களுடன் வரும் மோசடி வெளிநாட்டு அழைப்புகளை முடக்கும்படி, ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், இந்தியாவில் இருந்து மேற்கொள்வது போல வெளிநாடுகளில் இருக்கும் குற்றவாளிகள், போலி அழைப்புகள் மூலம், சைபர் கிரைம், நிதிமோசடியில் ஈடுபடுவதாகவும், அத்தகைய அழைப்புகளை அடையாளம் கண்டு முடக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

News May 27, 2024

தங்கம் வென்ற ‘முதல் இந்தியர்’ தீபா கர்மாகர்

image

ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ‘முதல் இந்தியர்’ என்ற வரலாற்று சாதனையை தீபா கர்மாகர் படைத்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் ஆசிய சாம்பியன்ஷிப் நடந்தது. அதன் மகளிர் பிரிவுக்கான இறுதிச்சுற்றில் அபாரமாக விளையாடிய தீபா 13.566 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். இது ஆசிய அளவில் தீபா கைப்பற்றிய 2ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே 2015இல் வால்ட் பிரிவில் அவர் வெண்கலம் வென்றிருந்தார்.

News May 27, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹520 உயர்வு

image

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹520 உயர்ந்துள்ளது. நேற்று ₹53,240க்கு விற்ற ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹53,760க்கு விற்பனை ஆகிறது. கிராம் ஒன்று ₹65 உயர்ந்து, ₹6,720க்கு விற்பனை ஆகிறது. 24 கேரட் சொக்கத் தங்கத்தின் விலை ₹7,190ஆக உள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ₹1.50 உயர்ந்து ₹97.50க்கு விற்பனை ஆகிறது.

News May 27, 2024

தமிழகத்தில் கணிசமான இடங்களை பாஜக வெல்லும்

image

தமிழகத்தில் இம்முறை கணிசமான இடங்களை பாஜக வெல்லும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். பி.டி.ஐ., நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகளால் பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ்நாட்டில் மக்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். இதனால் பாஜகவின் வாக்கு வங்கி விகிதம் உயர்வதுடன் நிச்சயமாக வலுவான அடித்தளத்தை அமைப்போம் என்பதில் சந்தேகமில்லை எனக் கூறினார்.

News May 27, 2024

ஓடிடி வருகைக்குப் பின் நல்ல ரீச் கிடைக்கிறது

image

ஓடிடி.யில் படம் பார்க்கலாம் என்ற மனநிலை அதிகரித்திருப்பதால் திரையரங்குகளுக்கு வருகின்ற மனநிலை குறைந்துள்ளது என நடிகர் ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். ‘PT சார்’ பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஓடிடி வருகைக்குப் பின் வித்தியாசமான கதைகளுக்கு நல்ல ‘ரீச்’ கிடைக்கிறது. இது சரியா? தவறா? என தற்போது கூற முடியாது. இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் என்னவாகிறது என்பதை பார்க்கலாம்” என்றார்.

error: Content is protected !!