India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், விளையாடும் ஸ்காட்லாந்து அணி வீரர்களின் ஜெர்சியில் கே.எம்.எஃப்பின் நந்தினி பால் லோகோ இடம்பெறவுள்ளது. டெண்டர் & ஏல செயல்முறைகள் மூலம் அந்த அணிக்கு நந்தினி ஸ்பான்சர் வழங்கியுள்ளது. அமுலுக்கு போட்டியாக சர்வதேச சந்தையை இலக்கு வைத்து இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆவினை களமிறக்க தமிழக விளையாட்டுத்துறையும் முனைப்பு காட்டுமா?
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் உயர்கல்வித் துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. திமுக அரசால் கடந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுள்ள தமிழக அரசு, புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளதாகவும், அடிப்படை கட்டமைப்பில் முன்னணியில் உள்ளதாகவும் கூறியுள்ளது.
உக்ரைன் போரை காரணமாக வைத்து ரஷ்யா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. எனினும், UAE வழியாக ரஷ்யாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. 2023-24ஆம் நிதியாண்டில் 65.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35.4% அதிகமாகும். இயந்திரங்கள், விமான உதிரிபாகங்களே அதிகம் ஏற்றுமதியாகியுள்ளன. மருந்து, தேநீர், காபி, புகையிலை ஏற்றுமதி குறைந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக INDIA கூட்டணி தலைவர்கள் ஜூன் 1ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். காணொளி காட்சி வாயிலாக இந்த ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 1 இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு மேல் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
நாட்டின் மெட்ரோ நகரங்களில் உள்ள உணவகங்கள், பார்கள், பப்கள் & கஃபேக்கள் நேற்று பெரும் லாபத்தை ஈட்டியுள்ளன. தேர்தல் & கோடை விடுமுறை காரணமாக கடந்த சில நாள்களாக மதுபான பார்கள், உணவகங்களில் வாடிக்கையாளர் வருகை குறைந்திருந்தது. வழக்கமான வார இறுதியுடன் ஒப்பிடும்போது, 30-50% அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் இறுதிப்போட்டி காரணமாக இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதிமுகவின் நிறுவனப் பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை கலிங்கப்பட்டி இல்லத்தில் அவர் தவறி விழுந்தார். அதனையடுத்து அவருக்கு தோள் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்ய அவர்கள் பரிந்துரைத்ததையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜய் நடிக்கும் பெரும்பாலான படங்களில் அவரது சொந்தக் குரலிலேயே ஒரு பாடல் பாடுவது வழக்கம். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கிவரும் G.O.A.T படத்தில் விஜய் 2 பாடல்களைப் பாடியிருக்கிறாராம். இந்தத் தகவலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். உங்களுக்கு விஜய்யின் குரலில் பிடித்த பாடல் எது?
டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவாலுக்கு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உச்சநீதிமன்றம் ஜுன் 1 வரை இடைக்கால ஜாமின் அளித்தது. அந்த ஜாமின் முடிந்து ஜுன் 2இல் அவர் சிறைக்குத் திரும்ப வேண்டியுள்ளது. இந்நிலையில் உடல்நிலை குறித்து மருத்துவப் பரிசோதனைகள் நடத்த வேண்டியுள்ளதால், இடைக்கால ஜாமினை 7 நாள்கள் நீட்டிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
1947 தொடங்கி இதுவரை 14 பேர் இந்திய பிரதமராகப் பதவி வகித்துள்ளனர். இந்திரா (ஒருமுறை), தேவகவுடா, குஜ்ரால்,மன்மோகன் சிங் என 4 பேர் பிரதமரானபோது, மாநிலங்களவை எம்.பி.,யாக இருந்தார்கள். நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா, சரண் சிங், ராஜிவ், வி.பி.சிங், வாஜ்பாய், மோடி என 8 பிரதமர்கள் உ.பி.,யில் இருந்து தேர்வாகியுள்ளனர். இவர்கள் தவிர குல்சாரிலால் நந்தா இருமுறை இடைக்காலப் பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.
கோயபல்ஸ் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டது ஆம் ஆத்மி என்று ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அரசியலுக்கு வர மாட்டோம் எனக் கூறிவிட்டு ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கியுள்ளதாகவும், காங்கிரசுடன் கைகோர்க்க மாட்டோம் எனக் கூறிவிட்டு கூட்டணி அமைத்துள்ளதாகவும், ஊழல் செய்ய மாட்டோம் எனத் தெரிவித்துவிட்டு ஊழல் புரிந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.