India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IPL தொடரில் கடந்த சில வருடங்களாக முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகளே கோப்பையை வென்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐபிஎல் முதலாவது தகுதி சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா அணியே, இறுதிப்போட்டியிலும் அந்த அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2018 முதல் 2024 வரை முதல் தகுதி சுற்றில் வெல்லும் அணிகளே, அடுத்தடுத்து ஐபிஎல் கோப்பைகளைக் கைப்பற்றி வருகின்றன.
சென்னை அயனாவரத்தில் லேப்டாப்புக்கு சார்ஜ் போட்ட பயிற்சி மருத்துவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதாகும் மருத்துவர் சரனிதா, விடுதியில் தங்கி பணி செய்து வருகிறார். அவரது கணவர் பலமுறை ஃபோன் செய்தும் எடுக்காத காரணத்தால் விடுதி நிர்வாகத்துக்கு ஃபோன் செய்து, மனைவியை பார்க்க சொல்லியிருக்கிறார். அப்போது, சரனிதா சார்ஜரை கையில் பிடித்தவாரே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பள்ளிகளுக்கு அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து ஜூன் முதல் உணவு விநியோகிக்கவும், பயனாளிகளுக்கு உணவு வழங்கிட பொறுப்பாளர்களை நியமிக்கவும், தட்டு, டம்ளர் உள்ளிட்ட உபகரணங்களை ஏற்பாடு செய்யவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பயனர்களின் தரவுகளை WhatsApp செயலி ஒவ்வொரு நாள் இரவும் திருடுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்டத் தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாகக் கூறிய அவர், வாட்ஸ்ஆப் பாதுகாப்பானது என்று சிலர் தற்போதும் நம்புவது ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் இதுவரை எவ்வித விளக்கமும் தெரிவிக்கவில்லை.
பிஹாரைப் போல தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பிஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு குடும்ப வன்முறைகள், உயிரிழப்புகள் குறைந்து விட்டதாகவும், அவை அனைத்தும் நினைத்து பார்க்க முடியாத சாதனைகள் எனவும், மதுவணிகத்தை விட மதுவிலக்குதான் மக்களுக்கும், மாநிலத்துக்கும் நன்மை என்பதை பிஹாரிடமிருந்து தமிழக அரசு கற்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 15 நாள்களாக தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்களின் விலை கிலோவுக்கு ₹20 முதல் ₹50 உயர்ந்துள்ளன. கடந்த வாரம் கிலோ ₹15க்கு விற்ற தக்காளி தற்போது ₹50, பீன்ஸ் கிலோ ₹70இல் இருந்து ₹120, உருளைக்கிழங்கு கிலோ ₹60இல் இருந்து ₹100, சேனைக்கிழங்கு கிலோ ₹60இல் இருந்து ₹80 என விலை உயர்ந்துள்ளது.
நீதிபதி சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், தனக்கு இந்த வழக்கு தொடர்பாக அதிகாரமிக்க நபர்கள் அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவித்தார். ஆனால், அவர்களின் பெயர் குறித்தத் தகவலை அவர் வெளியிடவில்லை.
சூப்பர் ஹிட் படமான “96” பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் கார்த்தி நடித்துள்ள படத்திற்கு “மெய்யழகன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல், விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் பட இயக்குநர் நலன்குமார் சாமி இயக்கத்தில், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோருடன் கார்த்தி நடித்த படத்துக்கு “வா வாத்தியார்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த 2 படங்களும் இந்தாண்டில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளன.
அண்ணாமலை ஒரு காலி பெருங்காய டப்பா என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவை அவர் பாராட்டுவதில் சூழ்ச்சியும், உள்நோக்கமும் உள்ளதாக தெரிவித்த உதயகுமார், அவரது உளறல்களை யாரும் பொருட்படுத்த தேவையில்லை என்றார். முன்னதாக, ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று அண்ணாமலை கூறியதற்கு அதிமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காலையில் உயர்வுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 269.28 புள்ளிகள் உயர்ந்து 75,679.67 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 86.1 புள்ளிகள் உயர்ந்து 23,043.20 புள்ளிகளுடனும் வர்த்தகத்தைப் பதிவுசெய்துள்ளது. டாடா ஸ்டீல், சன் பார்மா, ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி ஆகியவை அதிக லாபம் ஈட்டி உள்ளன.
Sorry, no posts matched your criteria.