India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதானி போன்ற பெரும் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்யும் மோடி அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பணமில்லை என பொய் கூறுகிறது என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். சம்பாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “மத்திய பாஜக அரசு, கோடீஸ்வரர்களை இலக்காகக் கொண்டே கொள்கைகளை வகுக்கின்றது. இந்த அரசியலின் விளைவால்தான் அக்னிவீர் திட்டம், வேளாண் திருத்தச் சட்டங்கள் போன்றவை உருவாக்கப்பட்டன” என்றார்.
‘தக் லைப்’ படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருந்த கேரக்டரில் அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்புகள் ஏதுமின்றி பதிவிட்டுள்ளார். அதில், “அந்த உண்மையான மறக்க முடியாத நாள்களில் அற்புதங்கள் நடக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
மதுரை எய்ம்ஸ் பணி ஆரம்பிக்காமல் இருந்தபோது, அங்கிருந்து எடுத்த செங்கல்லை காட்டி உதயநிதி பிரசாரம் செய்தது வரவேற்பை பெற்றது. செங்கல்லை தூக்கிச் சென்றுவிட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியபோது, வேலையை தொடங்குங்கள் செங்கல்லை திருப்பி எடுத்து வருகிறேன் என உதயநிதி பதிலளித்தார். அண்மையில் பணி தொடங்கிய நிலையில், சொன்னபடி செங்கல்லை திருப்பி எடுத்து வருவாரா? என பாஜகவினர் கேட்கின்றனர்.
இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) உத்தரவுக்கு ஆதரவாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி வாக்களித்துள்ளார். ரஃபாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக்கோரி தென்னாப்பிரிக்கா ICJஇல் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த ICJ தலைவர் நீதிபதி நவாஃப் சலாம், ரஃபா மீதான தாக்குதலை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இத்தீர்ப்பை பண்டாரி உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர்.
1992ஆம் ஆண்டில் வெளியான சமயத்திலேயே பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது ‘தேவர்மகன்’ படம். உட்சாதி முரணை பற்றி பேசி இருந்தாலும், அதில் இடம்பெற்ற ஒரு பாடலால் தென் தமிழகத்தில் ஏற்பட்ட மோதல்களும் உயிரிழப்புகளும் ஏராளம் என்று பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் பேசிவந்தனர். அப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு இப்போது எதிர்ப்பு கிளப்புமா என கேள்வியெழுந்துள்ளது.
ஜூன் 4ஆம் தேதி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடத் தயாராகுங்கள் என்று அண்ணாமலை பேசியுள்ளார். சென்னையில் இன்று அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், “டெல்லி மற்றும் குஜராத்தில் பாஜக முழுமையான வெற்றி பெறும். நாடு முழுவதும் தாமரை மலர்ந்துள்ள காட்சியை தேர்தலுக்குப் பின் பார்ப்பீர்கள்” என்றார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை மாவட்டங்களில் சாரல் மழை பெய்வதுண்டு. ஆனால், கேரளாவில் நல்ல மழைப் பொழிவு ஏற்படும். தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். இந்நிலையில், இன்னும் 5 நாள்களில் பருவமழை தொடங்க சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனையின் ICUவில் ஆகாஷ் என்ற மருத்துவர் மட்டுமே இருந்திருக்கிறார். அவரும், ஆயுர்வேத பட்டம் பெற்றவர் என்றும், அலோபதி மருத்துவர்கள் யாருமே மருத்துவமனையில் இல்லை என்றும் FIRஇல் குறிப்பிடப்பட்டுள்ளது.
IPL தொடரில் கடந்த சில வருடங்களாக முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகளே கோப்பையை வென்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஐபிஎல் முதலாவது தகுதி சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா அணியே, இறுதிப்போட்டியிலும் அந்த அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2018 முதல் 2024 வரை முதல் தகுதி சுற்றில் வெல்லும் அணிகளே, அடுத்தடுத்து ஐபிஎல் கோப்பைகளைக் கைப்பற்றி வருகின்றன.
சென்னை அயனாவரத்தில் லேப்டாப்புக்கு சார்ஜ் போட்ட பயிற்சி மருத்துவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதாகும் மருத்துவர் சரனிதா, விடுதியில் தங்கி பணி செய்து வருகிறார். அவரது கணவர் பலமுறை ஃபோன் செய்தும் எடுக்காத காரணத்தால் விடுதி நிர்வாகத்துக்கு ஃபோன் செய்து, மனைவியை பார்க்க சொல்லியிருக்கிறார். அப்போது, சரனிதா சார்ஜரை கையில் பிடித்தவாரே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.