India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திறந்தநிலைப் பள்ளிச் சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. TNPSC தேர்வுகளில் திறந்தநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது; தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தேசிய திறந்தநிலைப் பள்ளி மாணவர்கள் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் இடைக்கால தடை விதித்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்கு பூட்டு போட்டு விடுவார்கள் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உ.பி பரப்புரையில் பேசிய அவர், ‘INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால், முதல் ஆண்டில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவார்கள், 2ஆவது ஆண்டில் முத்தலாக்கை அமல்படுத்துவார்கள்’ என்றார். மேலும், PFI தடை நீக்குதல், பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் எனவும் கூறினார்.
பாஜக தேர்தல் விளம்பரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸை விமர்சித்து நாளிதழ்களில் மே.வங்க பாஜக விளம்பரம் அளித்த நிலையில், அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த திரிணாமுல் கட்சியினர், உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றனர். இதனிடையே, அந்த தடையை நீக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் SRH அணியை வீழ்த்தி KKR அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து, இத்தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்காக பாடுபட்ட மைதான பராமரிப்பாளர்கள், பிட்ச் தயாரிப்பாளர்களை பாராட்டும் வகையில் 10 முதன்மை மைதானங்களுக்கு தலா ₹25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக BCCI செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அத்துடன், கணிசமான போட்டி நடந்த 3 மைதானங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்குவதாக கூறினார்.
தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஜுன் 4இல் தேர்தல் முடிவு வந்த பிறகு பாஜக ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு அளிக்குமா எனக் கேள்வியெழுந்துள்ளது. ஆனால், பாஜகவுக்கு ஆதரவு அளித்தால், கூடவே இருந்து அழித்துவிடும், தமிழகத்திலும் செல்வாக்கு குறைந்துவிடும் என இபிஎஸ் கருதுவதால், ஆதலால் பாஜகவை ஆதரிப்பதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் வருகைக்கு பிறகு முதல்முறையாக நடிகர் விஜய் பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக தந்தை எஸ்.ஏ.சி உடன் விஜய் பேசிக்கொள்ளவில்லை. இதற்கிடையில் விஜய்யின் அரசியல் வழிகாட்டியாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் குறித்தும் எஸ்.ஏ.சி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், இச்சந்திப்பு அரசியல் ரீதியாகவும், குடும்ப உறவு ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோயிலில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் முதன்முறையாக சாமி தரிசனம் செய்தார். தமிழ் பெண்ணாக பாவாடை தாவணி உடை அணிந்து கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இந்த கோயில் மறைந்த தனது தாயார் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்தமான இடம் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரது பதிவுக்கு ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.
குடிநீரை தேக்கி வைத்துள்ள தொட்டிகளில் அண்மைகாலமாக மலம், மாட்டு சாணம் கலக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு உதாரணமாக, வேங்கைவயல், சங்கன்விடுதி சம்பவங்களைக் கூறலாம். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதே இந்த சம்பவங்களின் நோக்கம் என்பதால், இந்த சதிக்கு முடிவு கட்ட தொட்டிகளுக்கு உள்ளாட்சி நிர்வாகங்களால் பாதுகாப்பு அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. கவனிக்குமா தமிழக அரசு?
கடும் போட்டி காரணமாக ஸ்மார்ட் வாட்ச், இயர்பட் போன்ற அணியக்கூடிய மின்னணு சாதனங்களின் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன. இதனால், முன்னணி நிறுவனங்களின் இயர்பட்களின் ஆரம்ப விலை ₹400க்கும், ஸ்மார்ட் வாட்ச்கள் ₹999க்கும் விற்கப்படுகிறது. 1 வாங்கினால், 1 இலவசம் என சலுகைகளை அளித்த போதும் நிறுவனங்களால் அப்பொருட்களை வேகமாக விற்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா வரும் 31ஆம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவதாக முதல்முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானவை என்று கூறிய அவர், தன் குடும்பத்தினர், கர்நாடக மக்கள், ஜேடிஎஸ் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள அவர், உடனே நாடு திரும்ப தேவகவுடா எச்சரித்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.