News May 27, 2024

6 மொழிகளில் பாடியுள்ள ஸ்ரேயா கோஷல்

image

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கியுள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2ஆம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படம் வெளியாகும் 6 மொழிகளிலும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள பாடல் நாளை மறுநாள் காலை 11.07 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

News May 27, 2024

அதிமுக தலைவர்களோடு விவாதத்திற்கு தயார்

image

ஜெயலலிதா தீவிரமான இந்துத்துவா தலைவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் இல்லை என்று அதிமுகவினர் கருதினால், நேரடியாக தன்னிடம் விவாதத்துக்கு வரலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று அவர் ஏற்கெனவே கூறியதற்கு, அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர்களை விவாதத்திற்கு அழைத்துள்ளார்.

News May 27, 2024

பள்ளிப் பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு செயல்திட்டம்

image

சாதி ஒழிப்புக்கான செயல்திட்டத்தை பள்ளி பாடத்திட்டம் வாயிலாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கல்வி அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. பாடத்திட்டத்தில் சமத்துவம், சமூக சிந்தனை கருத்துகளை இடம்பெறச் செய்து மாணவர்களிடம் கொண்டு சென்றால், சமூக மாற்றம் நிகழும். பள்ளிகள் திறப்புக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், காலதாமதமின்றி அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

News May 27, 2024

நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்னென்ன?

image

நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. சோர்வு, மங்கலான பார்வை, திடீர் உடல் எடைக் குறைவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகம் எடுத்தல், அதீத பசி போன்ற அறிகுறிகள் உடலில் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 10.1 கோடி பேருக்கு நீரிழிவு நோய் உள்ளதாக ஐசிஎம்ஆர் ஆய்வுகள் கூறுகின்றன.

News May 27, 2024

எடியூரப்பா மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் மரணம்

image

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டிய பெண் உயிரிழந்தார். 53 வயதான அந்தப் பெண், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

News May 27, 2024

ED-யிடம் மோடி தன்னை கடவுளின் குழந்தை என்பார்

image

INDIA கூட்டணி ஆட்சியில் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன்னை கடவுள் அனுப்பி வைத்ததாக கூறுவதை விமர்சித்த அவர், ஜூன் 4க்கு பிறகு ஊழல் தொடர்பாக ED கேள்வி எழுப்பினால், தனக்கு எதுவும் தெரியாது, தன்னை கடவுள் அனுப்பினார் என்று மோடி கூறுவார் என்றார். ஜூன் மாதம் முதல் பெண்கள் வங்கிக் கணக்கில் மாதம் ₹8500 செலுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

News May 27, 2024

மிகச் சுவையாக சமைக்கும் பெண்களை கொண்ட நாடுகள்

image

உலகில் பெண்கள் மிகச் சுவையாகவும், அதிக வெரைட்டிகளிலும் சமைக்கும் 5 நாடுகளின் பட்டியலை வோக் இதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலிடத்தில் இருப்பது இந்தியாதான். உலகின் சிறந்த சமையல்காரர்களாக இந்திய பெண்கள் இருப்பதாகவும், பல வித்தியாசமான முறைகளில் அவர்கள் சமைப்பதாகவும் ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், மெக்சிகோ, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

News May 27, 2024

ஆப்பிள் விலையை அதானி தீர்மானிக்கிறார்: பிரியங்கா

image

இந்தியாவில் மோடிக்கு நிகரான தலைவர் இல்லை என்ற பிம்பம் இருப்பதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இமாச்சலின் காங்க்ராவில் பிரசாரம் செய்த அவர், நாடு வளர்ந்து வருவதாக பாஜகவினர் கூறுவதாகவும், ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதாகவும் கூறினார். மேலும், அனைத்து குளிர்சாதன கிடங்குகளும் அதானியிடம் இருப்பதால் ஆப்பிள் விலையை அவர்தான் தீர்மானிப்பதாக குற்றம் சாட்டினார்.

News May 27, 2024

BREAKING: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு

image

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News May 27, 2024

லேப்டாப் சார்ஜர் உயிரை பறிக்குமா?

image

சென்னையில் லேப்டாப்பிற்கு சார்ஜ் செய்த போது பெண் பயிற்சி மருத்துவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், லேப்டாப் சார்ஜரில் வெளியாகும் வோல்டேஜ் உயிரை பறிக்குமா என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக, லேப்டாப் சார்ஜரில் 19 Volt DC Output வெளியாகும். இது ஷாக் உணர்வை தராது. மாறாக, சார்ஜரில் பழுது ஏற்பட்டிருந்தால், அதிகப்படியான மின்சாரம் வெளியாக வாய்ப்புள்ளது.

error: Content is protected !!