India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வட கொரியா ஜூன் 4ஆம் தேதிக்கு முன்னதாக உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் வட கொரியா, மேற்கு கடற்கரையிலிருந்து அடையாளம் தெரியாத எரிபொருளை ஏவியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இது அணு ஆயுதங்கள் கொண்ட உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தும் முயற்சியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தனது கடைசி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் நடால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை எதிர்கொண்ட அவர், 6-3, 7-6, 6-3 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியை தழுவினார். 14 முறை சாம்பியனான நடால், நான்காம் நிலை வீரரான ஸ்வெரெவ்வை எதிர்கொண்டு முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருடன்’. உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில், சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெற்றிமாறன் கதை எழுதி, தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்று அளித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 105 டிகிரி பாரன்ஹீட், மதுரையில் 101.12, திருச்சியில் 100.22, வேலூர் 103.83 பாரன்ஹீட், ஈரோடு மற்றும் திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவாகியுள்ளது. இனி வரும் நாள்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெயில் காரணமாக வழக்கறிஞர்கள் கறுப்பு நிற கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கோடை வெயிலை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட மாதம் மட்டும் கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கோடையில் இதுபோன்ற ஆடைகளை அணிவதால் பணித்திறன் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சில உணவு வகைகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. *காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது *அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கலாம் *ஆரஞ்சு, திராட்சை பழங்களை சாப்பிடக்கூடாது *காபி, டீ குடிக்கக்கூடாது *இனிப்பு மிகுந்த உணவுகளை சாப்பிடக் கூடாது. இவை உங்கள் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, செரிமான பிரச்னையையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆட்சியை கலைப்போம் என்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என ஜெக்ரிவால் தெரிவித்துள்ளார். ஜூன் 4க்கு பிறகு, பஞ்சாப் அரசை கலைப்போம் என்று அமித் ஷா மிரட்டுவது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்ற அவர், சிபிஐ, ED மூலம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவோம் என பாஜகவினர் கூறுவதாக குற்றம் சாட்டினார். தேர்தலுக்கு பிறகு பஞ்சாப் முதல்வராக பகவந்த் சிங் மான் நீடிக்க மாட்டார் என அமித் ஷா கூறியிருந்தார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018இல் வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. சாதிய பிரச்னை பற்றி பேசியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. இந்நிலையில், இப்படம் சித்தார்த் சதுர்வேதி – த்ரிப்தி இம்ரி நடிப்பில் ‘தடக் 2’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக்காக உள்ளது. இதன் முதல் பாகமான ‘தடக்’ நாகராஜ் மஞ்சுளே இயக்கிய மராத்தி படமான சாய்ராத்தின் இந்தி ரீமேக்காக உருவானது குறிப்பிடத்தக்கது.
கட்டாயக் கல்வித் திட்டம் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்த பெற்றோர்கள் தாங்கள் பதிவு செய்த பள்ளிகளில் நாளை நடைபெறும் குலுக்கலில் கலந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், அதனைக் குலுக்கல் முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிபாரிசு அடிப்படையில் ஒதுக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான சமீர் வி காமத்தின் பதவிக் காலத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதி வரை அவர் பதவி வகிப்பார். 1989ஆம் ஆண்டு DRDOஇல் சேர்ந்த இவர், பல்வேறு திட்டங்களுக்கு வழிகாட்டியாகவும், தலைமை பொறுப்புகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.