India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மே 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
* நெல்லையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை 7 நாள்களுக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
* பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா வரும் 31ஆம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகிறார்.
* +2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
* ஜெயலலிதா இந்துத்துவவாதி என்பது தொடர்பாக அதிமுகவினருடன் விவாதத்திற்கு தயார் – அண்ணாமலை
பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் குடும்ப உறவுகளுக்கு இடையிலான பிணைப்பை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், புனித யாத்திரைகள் செல்லவும், உறவினர்களை சந்திப்பதற்கும், வேலைக்கு செல்லவும் பெண்கள் இலவச பேருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். மேலும், பெண்களிடம் சேமிப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குஜராத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். அதேபோல், டெல்லியில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் பலியாகின. 2 விபத்திற்கும் ஆஜாக்கிரதையே காரணம் என கூறலாம். 2 இடங்களிலும் தீயணைப்பு படையிடம் இருந்து உரிய சான்றிதழ் பெறாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்தந்த துறை அதிகாரிகள் உஷார் நிலையில் இருந்திருந்தால், விலைமதிப்பற்ற மனித உயிர்களை காத்திருக்கலாம்.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்துக்கு சருமத்தின் நிறத்தை ஒரு ஷேடு லைட்டாக மாற்றும் மருத்துவ ஆற்றல் இருப்பதாக அரோமாதெரபிஸ்ட்டுகள் கூறுகின்றனர். Sun tan-ஐ போக்க தயிர்- ஓட்ஸ் பேக்கை பயன்படுத்துமாறு அவர்கள் பரிந்துரைக்கின்றனர். புளித்த தயிரில் ஓட்ஸ், மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்தால் தயிர்- ஓட்ஸ் பேக் ரெடி. அதனை தினமும் இரவு பூசிவந்தால் வெயில் பட்டுக் கருத்துப்போன சருமம் பழைய நிறத்துக்குத் திரும்பும்.
*மேஷம் – ஆக்கம் உண்டாகும் *ரிஷபம் – ஆரோக்கியம் கிடைக்கும் *மிதுனம் – வெற்றி கிடைக்கும் *கடகம் – பாசம் கொட்டும் *சிம்மம் – உதவி பெறுவீர் *கன்னி – யோகமான நாள் *துலாம் – கோபம் தவிர்க்கவும் *விருச்சிகம் – மறதி இருக்கும் *தனுசு – ஆர்வம் அதிகரிக்கும் *மகரம் – ஓய்வு கிடைக்கும் *கும்பம் – பக்தி வெளிப்படும் *மீனம் – பாராட்டு கிடைக்கும்.
பாலிவுட் நடிகைகள் அனன்யா பாண்டே, சாரா அலி கான் ஹாட் வீடியோக்களை யூடியூபில் தேடிய லைவ் ஸ்டிரீம் ஸ்கிரீன் ஷாட்கள் வெளியாகி RR வீரர் ரியான் பராக் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் வரை முன்னேறிய RR அணியில் இடம்பிடித்த ரியான் பராக் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படியொரு மோசமான சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
*வெயில் காலங்களில் மதுப் பிரியர்களால் அதிகம் அருந்தப்படும் பீர், உலகின் மிக பழமையான பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. *உலகின் முதல் பீரை தயாரித்தவர் ஒரு பெண் எனக் கூறப்படுகிறது. *உலகளவில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் பீர் 3ஆவது இடத்தில் உள்ளது. தண்ணீர், டீ ஆகியவை முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. *உலகில் பழமையான பீர் ஆலை ஜெர்மனியில் உள்ளது. சுமார் 1,000 ஆண்டுகளாக இந்த ஆலை செயல்பட்டு வருகிறது.
கேரளாவில் வெஸ்ட் நைல், டெங்கு போன்ற பரவும் நோய்களால் உயிரிழப்பு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உலக மக்கள் தொகையில் 80% பேருக்கு கொசுக்கள், ஈக்கள் மற்றும் பூச்சிகள் மூலம் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும், கொசு வலைகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு WHO பரிந்துரைக்கிறது.
வட கொரியா ஜூன் 4ஆம் தேதிக்கு முன்னதாக உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் வட கொரியா, மேற்கு கடற்கரையிலிருந்து அடையாளம் தெரியாத எரிபொருளை ஏவியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இது அணு ஆயுதங்கள் கொண்ட உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தும் முயற்சியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.