India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முக்கிய வாக்குறுதியாக உள்ளது. இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், பாஜகவை ஏற்காத மாநிலங்களில் கூட அதன் கொள்கையை திணிப்பதுதான் இம்முறை எனவும் சாடினார். மேலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை பாஜக சிதைக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்த உடன் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும் எனக் கூறிய அவரிடம் வாக்குக்கு பணம் வாங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அரசியல் கட்சியினர் 5 ஆண்டுகள் ஆட்சியில் பணத்தை ஆட்டையை போட்டு, மீண்டும் அதை கொடுக்கின்றனர். அதை வாங்கிக் கொண்டு, சரியான நபருக்கு ஓட்டு போட வேண்டும் என்றார்.
இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தினாலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. இந்த மாநிலங்களில் வளர முயற்சி செய்யும் பாஜக, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. தமிழ்நாட்டில் வரும் மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்கு வங்கியைப் பெற பாஜக மும்முரமாக வேலை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழை உலகமெங்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில், அத்திட்டத்தை அமல்படுத்துவோம் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. தேர்தல் செலவு, நேரம் விரையம் ஆகியவை இத்திட்டதிற்கான காரணங்களாக பாஜக கூறுகிறது. அதே நேரம், தற்போதைய சூழலில் இத்திட்டம் அவசியமில்லை என்கிறார்கள் எதிர்க்கட்சிகள். இத்திட்டம் அமலாகுமா? இல்லையா? என்பதை வரும் தேர்தலின் முடிவுகளே தீர்மானிக்கும்.
நாடு முழுமைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்றார். வந்தே பாரத் படுக்கை வசதி ரயில், வந்தே பாரத் இருக்கை ரயில், வந்தே பாரத் மெட்ரோ ரயில் என 3 வகை ரயில்களை இயக்க பாஜக நடவடிக்கை எடுக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.
7 துறைகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்பதை மத்திய அரசின் ஆய்வு அமைப்புகள் வெளியிட்ட புள்ளிகளின் மூலம் முதலமைச்சரின் சாதனைகள் நிரூபணமாகியுள்ளது என்று திமுக தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கி தங்கி இருந்தது. தற்போது ஜவுளித் துணி, ஆயத்த ஆடைகள், தோல் பொருள் ஏற்றுமதிகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இது திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவரில் எறியப்படும் பந்து, அதே வேகத்தில் திரும்பி வரும். அதேபோல் நன்மை, தீமைகளும் நமக்கே திரும்பும். நன்மை செய்யும்பட்சத்தில், நட்புவட்டம் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் வலுவடையும். பிரச்னைகளின்போது தோள்கொடுக்க கூட்டமே திரளும். தீமை செய்யும்பட்சத்தில், பிரச்னை நமக்கே திரும்பும். அதை எதிர்கொள்ள முடியாததோடு, தோள்கொடுத்து உதவ யாரும் வர மாட்டார்கள். இந்த உண்மையை உணர்ந்து செயல்படுவோம்.
IPLஇல் இதுவரை நடந்த போட்டிகளில் குவித்த ரன்கள் அடிப்படையில் பேட்ஸ்மேன்களை பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது. அதில் ஆர்சிபி வீரர் கோலி 319 ரன்கள் (6 போட்டிகள்) குவித்து முதலிடத்தில் உள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் 284 ரன்களுடன் (6 போட்டிகள்) 2ஆவது இடத்திலும், இன்னொரு ராஜஸ்தான் வீரர் சாம்சன் 264 ரன்களுடன் (6 போட்டிகள்) 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் கௌரவமான தமிழ்மொழி வளர்க்கப்படும் என்றும் தமிழ்மொழி வளர்ச்சித் திட்டம் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று கூறினார். மேலும், திருநங்கைகளையும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் வாழும் ஏழைகளுக்கு தற்போதுதான் உரிமைகள் கிடைக்கிறது என்றும், அதேநேரத்தில் ஏழைகளின் சொத்துகளை கொள்ளையடித்தோர் சிறைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நடவடிக்கை தொடரும், இது மோடியின் உத்தரவாதம் என்றும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.