India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தால் அனல் பறந்து ஓய்ந்த தமிழக அரசியல் களம், ஜெயலலிதாவை இந்து தலைவர் என அண்ணாமலை கூறியதால் மீண்டும் சூடு பிடித்துள்ளது. ஜெ.வை இந்து தலைவர் என அண்ணாமலை திடீரென கூறியது ஏன்? இதில் என்ன லாஜிக் உள்ளது? எனக் கேள்வி எழும் நிலையில், ஜெயலலிதா ஆதரவாளர்களை பாஜகவுக்கு ஈர்க்க இதுபோல கூறினாரா? அதிமுகவில் இந்து, இந்து அல்லாதோர் என பிளவு ஏற்படுத்த கூறினாரா? என சந்தேகமும் வருகிறது.
சர்வதேச சந்தை, இந்திய சந்தை ஆகியவற்றில் இந்தாண்டில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தங்கம் விலையை விட வெள்ளி விலை அதிகமாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை இந்தாண்டில் 30 சதவீதமும், தங்க விலை 20 சதவீதமும் உயர்ந்துள்ளது. வரும் மாதங்களில் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து, இந்தாண்டின் இறுதியில் 1 கிலோ மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டும் எனக் கூறப்படுகிறது.
வங்கக் கடலில் உருவான ரெமல் புயல், நேற்று வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, அங்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இடி விழுந்து ஒருவர், மரம் விழுந்து ஒருவர் என 6 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 2,140 மரங்கள் வேருடன் சாய்ந்தன, 337 மின் கம்பங்கள் கீழே விழுந்தன. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்திற்கு கூலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினி அவரது நண்பராக சத்யராஜ் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜை சங்கர் அணுகியதாகவும், ஆனால் நடிக்க மறுத்து விட்டதாகவும், அதேநேரத்தில் தற்போது லோகேஷ் இயக்கும் கூலி படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் பணம் இல்லையெனில் அபராதம் விதிக்கக் கூடாதென வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதை மீறும் வகையில், YES BANK தனது வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதையடுத்து அதற்கு ரூ.91 லட்சமும், கடனுதவி தொடர்பான விதி மீறலுக்கு ICICI வங்கிக்கு ரூ.1 கோடியும் RBI அபராதம் விதித்துள்ளது. இரு வங்கிகளும் 2022ஆம் நிதியாண்டில் விதிமீறலில் ஈடுபட்டுள்ளன.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று விஜய்யின் தவெக சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், “அனைவருக்கும் உணவு கிடைத்திடவும், பட்டினியில்லா உலகை ஏற்படுத்துவதற்காகவும் சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்” என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உ.பி.,யின் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றுபவர் வர்ஷா. இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடி & முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் மீது பகையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன், அவரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் ‘பாரா’ பேட்மிண்டன் சர்வதேச தொடரில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ் & மனோஜ் சர்க்கார் ஆகியோர் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர். மனமா நகரில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் ‘எஸ்.யு.5’ இறுதிச் சுற்றில் மணிஷா, இத்தாலியின் இபோமோவை 21-9, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் ‘எஸ்.எல்.3’ பிரிவு போட்டியில், மனோஜ் சர்க்கார் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
ஜூன் 1ஆம் தேதி நடைபெறவிருக்கும் I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லவிருக்கிறார். தேர்தல் முடிவுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க I.N.D.I.A கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் தன்னால் வர முடியாது என்று மம்தா ஏற்கெனவே கூறியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எழுதுவோர் தனக்கு மூன்று, நான்கு திருமணங்கள் செய்து வைத்துவிட்டதாக நடிகை அஞ்சலி நகைச்சுவையாக கூறியுள்ளார். திருமணம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன். ஆனால், அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இப்போது நான் சினிமாவில் பிசியாக இருக்கிறேன். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது” என்றார்.
Sorry, no posts matched your criteria.