India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்காவில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் கடந்தாண்டு 9.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எஃப்.பி.ஐ வெளியிட்ட அறிக்கையில், 2019இல் கொரோனா காரணமாக மக்கள் வீட்டில் இருந்து பணிபுரிய தொடங்கியதால் வீடுகளில் நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் குறைய தொடங்கியுள்ளன. அதே நேரம், 2019-2022ஆம் ஆண்டு வரை கடைகள், அலுவலகங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் வெங்கட் மோகன். இவர் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ஹண்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
*வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ கூட்டு செய்யும்போது தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் ருசியாக இருக்கும்.
*உளுந்து வடை செய்யும்போது 2 டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
*எந்த வகை சட்னி செய்தாலும் சிறிது புதினா சேர்த்து அரைக்க வாசனையாக இருக்கும்.
*பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் விரைவில் பழுக்காது.
தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டு தின வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு விரைவில் முதல் பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் எனப் பலர் நடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால் மீன்களின் வரத்து குறையும் என்பதால் வஞ்சிரம், கடம்பா போன்ற மீன்களின் விலை கணிசமாக உயரலாம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.
தனது திருமணம் பாரம்பரிய முறைப்படிதான் நடைபெறும் என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். திருப்பதி கோயிலில் எனது திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். காஞ்சி பட்டுடுத்தி, மல்லிகைப் பூ வைக்க எனக்கு ஆசை. மணமகனும் வேஷ்டி சட்டையில்தான் இருக்க வேண்டும். திருமணத்திற்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக வாழை இலையில்தான் உணவு பரிமாறப்படும் எனக் கூறியுள்ளார்.
3.50 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஸ்டாலின் அளித்த வாக்குறுதி என்ன ஆனது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 10 லட்சம் அரசு வேலை என மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று முதல்வர் Xஇல் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, பிரதமர் அளித்த வாக்குறுதி கடந்த 18 மாதங்களில் நிறைவேற்றப்பட்டது கூட தெரியாமல் முதல்வர் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு எனக் கூறியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த Pang Dong Lai என்ற நிறுவனம், ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருந்தால் 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. வேலை மற்றும் வாழ்க்கை சூழலை சீராக வைத்து கொள்வதற்காக இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்கள் நிம்மதியாக பணியாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சலுகை நமக்கும் கிடைத்தால் நன்றாக இருக்குமென இந்தியர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை தொடுக்கும் முன் தரவுகளை படிக்க வேண்டும் என பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்திற்கு காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் வலியுறுத்தியுள்ளார். பாஜக அளிக்கும் துண்டுச்சீட்டை சத்தமாக படிப்பதில் எந்த பயனும் இல்லை. மற்றவர்களை இந்து விரோதிகளாக சித்தரிப்பது பாஜகவின் வெற்றிக்கு உதவாது. ஏனெனில், அவர்களை விட நாங்கள் பெரிய இந்துக்கள் என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.