India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும் என்ற அவர், மற்ற தென் மாநிலங்களில் 20க்கும் குறைவான இடங்களிலேயே வெல்வார்கள் என்றார். பல இடங்களில் பாஜகவுக்கு டெபாசிட் பறிபோகும் என்றும், 400 இடங்களை எங்கிருந்து பாஜக பெற போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
PAN கார்டை மே 31ஆம் தேதிக்குள் ஆதார் கார்டுடன் இணைக்கும்படி, வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. இணைக்க தவறினால், அதிக டிடிஎஸ் தொகை பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு வருமான வரி மோசடிகள், குளறுபடிகள் நடப்பதை கண்டறிந்துள்ள வருமான வரித்துறை, PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் PAN கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கலாம்.
இளைஞர்கள் சிலர் தம்மை ஸ்டைலிஷாக காட்டிக் கொள்ள டாட்டூ போட விரும்புகின்றனர். ஆனால், பார்க்க அழகாக காட்சி தரும் டாட்டூ, ரத்த புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஸ்வீடனை சேர்ந்த மருத்துவக் குழு 11,905 பேரிடம் நடத்திய ஆய்வில், தோல் மீது செலுத்தப்படும் டாட்டூ இன்க் நிணநீர் மண்டலத்தில் புற்றுநோயை ஏற்படுத்த 21% அதிக வாய்ப்பு இருப்பதாக நிரூபணமாகியுள்ளது.
“ஏழைகளின் வெள்ளைத் தங்கம்” என அழைக்கப்படும் வெள்ளியின் விலை தங்கத்திற்கு இணையாக அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ₹1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சில்வர் இன்ஸ்டியூட் வெளியிட்ட தகவலில், உலகளவில் வெள்ளிக்கான தேவை 6% வளர்ச்சி அடையவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், தங்கத்தைப் போல அல்லாமல் தொழில்துறை உலோகமாக வெள்ளி பயன்படுத்தப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
உலகளவில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளியில் சுமார் 50% (சோலார் பேனல் & எலக்ட்ரிக் வாகன உற்பத்தி சார்ந்த) தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இந்த உலோகத்திற்கு டிமாண்ட் உயர்ந்துள்ளது. முதலீடு நோக்கம், புவிசார் பதற்றங்கள், பணவீக்கம், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு போன்ற காரணங்களால் வெள்ளியின் விலை மிகப்பெரிய அளவில் மேலும் உயரலாம் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில், சண்டை காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துவந்த தேவன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியலில் வில்லனாக அறிமுகமான தேவன் குமார், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகில் உள்ள பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை அளித்து வருவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். கடந்த 2 எம்.பி தேர்தல்களை ஒப்பிடுகையில், இந்த முறை காங்கிரஸ் நன்றாக போராடுவதாக தெரிவித்த அவர், பாஜக – காங்கிரஸ் இடையே நெருக்கமான போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெல்லும் என்பதை, இப்போதே உறுதியாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் மதிக்கத்தக்க தொழில்களாக மருத்துவம், என்ஜீனியரிங் பார்க்கப்படுகிறது. இதில் மருத்துவத்தில் அண்மைக்காலமாக என்ஜினீயரிங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் ஏஐ தொழில்நுட்பம், மருத்துவ உபகரணங்களை என்ஜீனியர்கள் உருவாக்குகின்றனர். இதனால் மருத்துவர் வேலைவாய்ப்பு, என்ஜீனியர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக, CRED சிஇஓ குணால் ஷா போன்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கலைஞரின் கனவு இல்லம் நிதி மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. *ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. *வீட்டின் குறைந்தபட்ச பீடம் பகுதி சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடி ஆர்சிசி கூரையால் மூடப்பட்டிருக்கும். *ஓலைகள், அஸ்பெஸ்டாஸ் தாள் கொண்ட கூரை தடை செய்யப்பட்டுள்ளது. *ஒவ்வொரு வீட்டிற்கும் ₹3.50 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என ஸ்வாதி மாலிவால் விமர்சித்துள்ளார். வலுக்கட்டாயமாக முதல்வரை சந்திக்க முயன்றதாக, என் மீது தவறான குற்றச்சாட்டுகளை சிலர் சுமத்துவதாக கூறிய அவர், பாதுகாவலர்கள் அனுமதி இல்லாமல் முதல்வர் அலுவலகத்திற்குள் யாரும் செல்ல முடியாது என்றார். கடின உழைப்பு காரணமாகவே எம்பி ஆக்கப்பட்டேன் என்றும், கட்சிக்குள் சிலருடன் விரோதம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.