News April 15, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக உச்சத்தில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.520 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 குறைந்து ரூ.54,320க்கும், கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கும், கிலோ வெள்ளி ரூ.89,500க்கும் விற்பனையாகிறது.

News April 15, 2024

ஜிஎஸ்டி-க்கு எதிராக குரல் கொடுத்தேன்

image

ஜிஎஸ்டி நல்ல திட்டம் என்றால் அதைச் சொல்லி பாஜகவினர் ஓட்டு கேட்டிருக்கலாம் என கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். திருப்பூரில் பேசிய அவர், மத்திய அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு தாக்குதலால் திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும், ஜிஎஸ்டி வேண்டாம் என முழங்கியவர்களில் தானும் ஒருவன் என்றும், ஜிஎஸ்டி போடும்போது சினிமா துறையில் இருந்து தான் குரல் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

News April 15, 2024

தோனியின் அறிவுரையே முக்கிய காரணம்

image

தோனியின் அறிவுரையே மும்பைக்கு எதிராக சிறப்பாக பந்துவீச உதவியதாக மதீஷா பதிரனா தெரிவித்துள்ளார். பந்துவீச துவங்குவதற்கு முன்பு, எதையும் யோசிக்காமல் எப்போதும் போல் இயல்பாக பந்துவீசும் படி தோனி கூறினார். அவரின் அந்த அறிவுரையே பதட்டத்தை குறைத்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக MI அணியின் 4 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி CSK வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

News April 15, 2024

‘விசில் போடு’ பாடலில் இதை கவனித்தீர்களா?

image

விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் ‘GOAT’ திரைப்படத்தின் முதல் பாடல் தமிழ் புத்தாண்டையொட்டி, நேற்று வெளியானது. இந்த பாடலில் பல குறியீடுகள் இருப்பதாக இணையத்தில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில், இதுவரை வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28, சரோஜா, மங்காத்தா, பிரியாணி என அனைத்து பட டைட்டில் போஸ்டர்களும், ‘விசில் போடு’ என்ற வாசகத்துடன் இடம்பெற்றுள்ளன.

News April 15, 2024

பாஜக எம்.எல்.ஏ.வுக்கு சிக்கல்

image

கடந்த 6ஆம் தேதி நெல்லை விரைவு ரயிலில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.4 கோடி, நெல்லை பாஜக வேட்பாளரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனின் பணம் என FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது பணம் இல்லை என நயினார் மறுத்திருந்த நிலையில், இது அவரது பணம் தான்; வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக செல்லப்பட்டதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவரின் அடையாள அட்டை நகலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News April 15, 2024

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் (1)

image

1951 முதல் 2019 வரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் 17 பேர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். 1951இல் நடந்த முதலாவது மக்களவைத் தேர்தலில் பஸ்தார் (சத்தீஸ்கர்) தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் முசாகி கோசா 1.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1957 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மொரார்ஜி தேசாய், சூரத்தில் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

News April 15, 2024

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் (2)

image

1962 தேர்தலில் சுதந்திரா கட்சி வேட்பாளரும், மகாராணியுமான காயத்ரி தேவி (ஜெய்ப்பூர்) 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 1967 தேர்தலில் கே.சிங் (பிகானீர்) 1.9 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 1971 தேர்தலில் காங்கிரசின் சஞ்சீவ் ராவ் (காக்கிநாடா) 2.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், 1977 தேர்தலில் ராம்விலாஸ் பாஸ்வான் (ஹாஜிபூர்) 4.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர்.

News April 15, 2024

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் (3)

image

1980 மக்களவைத் தேர்தலில் மகாராஜா மார்டன்ட் சிங் (ரேவா) 2.4 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 1984 தேர்தலில் ராகுல் காந்தி (அமேதி) 3.1 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். 1989 தேர்தலில் ராம்விலாஸ் பாஸ்வான் (ஹாஜிபூர்) 5 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 1991 தேர்தலில் காங்கிரசின் சந்தோஷ் மோகன் (திரிபுரா மேற்கு) 4.3 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி வாகை சூடினர்.

News April 15, 2024

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் (4)

image

1996 மக்களவைத் தேர்தலில் திமுகவின் சோமு (வடக்கு சென்னை) 3.9 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1998இல் பாஜகவின் கதிரியா வல்லபபாய் ராம்ஜிபாய் (ராஜ்கோட்) 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 1999இல் காங்கிரசின் கே.ஏ.சங்க்தம் (நாகாலாந்து) 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 2004இல் சிபிஎம்மின் அனில் பாசு (ஆரம்பக்) 5.9 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.

News April 15, 2024

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் (5)

image

2014 மக்களவைத் தேர்தலில் மோடி (வதோதரா) 5.7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் பாஜகவின் சிஆர் பாட்டீல் (நவ்சாரி) 6.9 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். வேட்பாளர் ஒருவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது, அவர்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பை காட்டுகிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால், மீண்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

error: Content is protected !!