India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவையில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கார்கே மற்றும் ஜே.பி.நட்டா இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார்கள். புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தட்டான் சாவடி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கார்கே பங்கேற்கிறார். பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து அண்ணா சிக்னல் முதல் அஜந்தா சிக்னல் வரை ரோடு ஷோ நடத்த உள்ளார் ஜே.பி.நட்டா. இதனால் புதுவையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான பயோகானை நிறுவிய கிரண் மஸூம்தார் ஷா, கர்நாடகாவில் கடந்த 1953இல் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 1978இல் ₹10,000இல் பயோகான் நிறுவனத்தை அவர் தொடங்கினார். தற்போது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹34,700 கோடியாக உயர்ந்துள்ளது. கிரண் மஸூம்தாரின் சொத்து மதிப்பு மட்டும் ₹23,247 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏப்.22ல் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், தனக்கு எவ்வித சம்மனும் விரவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரின் மைத்துனர் துரை என்பவரிடம் சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இன்று சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தேர்தல் பரப்புரை விறுவிறுப்படைந்துள்ளது. நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு அதிகளவில் செல்வாக்கு இருக்கிறது. அங்கு எப்படியும் பாஜக வெற்றிபெறும் என ஏற்கெனவே சொல்லப்பட்டது. இந்நிலையில், நெல்லை தொகுதி வேட்பாளரின் அணுகுமுறை கொஞ்சம் சரியில்லை; இதனால் அந்த தொகுதி தான் டவுட் ஆக இருக்கிறது என அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓப்பனாக பேசியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு தகவல் தெரிவித்தபிறகே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலால், மத்திய கிழக்கு பிராந்தியம் போர் பதற்றத்தில் உள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 72 மணி நேரத்துக்கு முன்பே தகவல் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளது. ஆனால், இதை அமெரிக்கா மறுத்துள்ளது.
திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள நீலகிரி வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, அங்கு தனியார் கல்லூரி மாணவர்களுடனும் அவர் உரையாட உள்ளார். அதன் பின், தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று அவர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
பண பறிமுதல் விவகாரத்தில் FIR பதிவு செய்யப்பட்டதால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 6இல் நெல்லை ரயிலில் அவருக்கு நெருக்கமான நபர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது போலீசார் FIR போட்டுள்ள நிலையில், வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மும்பை அணியின் தோல்விக்கு தோனியே முக்கிய காரணம் என பாண்டியா தெரிவித்துள்ளார். மும்பை பேட்டிங் செய்த போது ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்த ஒருவர், பவுலர்களுக்கு பிட்ச் எப்படி ரியாக்ட் செய்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அதுதான் மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது எனத் தோனியை மறைமுகமாக பாண்டியா பாராட்டியுள்ளார். MI 20 ரன்கள் வித்தியாசத்தில் CSK அணியிடம் நேற்று தோல்வியடைந்தது.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் நிலவும் ஸ்திரமின்மை காரணமாக இந்திய பங்கு சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 750 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வர்த்தக நேர தொடக்கத்தில் 920 புள்ளிகள் சரிவை சந்தித்த நிலையில், பிறகு சிறிது எழுந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 180 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.