News April 15, 2024

திமுக மீதான மக்களின் கோபம், பாஜகவுக்கு சாதகமாகிறது

image

தமிழகத்தில் திமுகவுக்கு மக்களிடையே நிலவும் கோபம், பாஜகவுக்கு சாதகமாக மாறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டி, இன்று மாலை வெளியிடப்படவுள்ளது. அதில் உள்ள சிறு பகுதியை அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் பேசியுள்ள மோடி, தமிழக மக்கள் திமுக மீது கோபத்தில் இருப்பதாகவும், அது பாஜகவுக்கு சாதகமாகி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

அரசியலமைப்பை மாற்றுவோர் கண்கள் பிடுங்கப்படும்

image

அரசியலமைப்பை யார் மாற்றினாலும், அவர்களின் கண்களை தலித்துகள் பிடுங்கி எறிவர் என்று லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாஜக தலைவர்கள் அரசியலமைப்பை மாற்றப் போவதாக தொடர்ந்து பேசி வருவதாகவும், அப்படி யார் மாற்றினாலும் அவர்களின் கண்களை ஏழைகளும், தலித்துகளும் பிடுங்கி எறிவர் என்றும் தெரிவித்தார். நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புவதாகவும் அவர் விமர்சித்தார்.

News April 15, 2024

தோனியின் அதிரடி மும்பைக்கு அழுத்தத்தை கொடுத்தது

image

தோனியின் அதிரடி மும்பை அணிக்கு உளவியல் அழுத்தத்தை கொடுத்திருக்கலாம் என சிஎஸ்கே பவுலிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். எதிரணிக்கு அழுத்ததை கொடுப்பது வெற்றி பெறுவதற்கு உதவி செய்யும். அந்த வகையில் தோனியின் பேட்டிங் மும்பையை பாதித்திருக்க அதிக வாய்ப்புண்டு. எங்களை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்த MI அணி முயன்றது. ஆனால், தோனியால் அவர்களின் எண்ணம் நிராசையானது என்று அவர் தெரிவித்தார்.

News April 15, 2024

ஜே.பி.நட்டாவின் பயணம் ரத்து

image

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் நீலகிரி தொகுதி பரப்புரை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நீலகிரியில் எல்.முருகனை ஆதரித்து நாளை நட்டாவின் சாலைப் பேரணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் அதிகமாக இருப்பதால் பயணம் ரத்தானதாக தகவல்கள் கூறுகின்றன.

News April 15, 2024

ஏப்.19ஆம் தேதி கட்டாய விடுமுறை

image

மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.19ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும்; விடுமுறை அளிக்கவில்லை என்றால் தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சாகு எச்சரித்துள்ளார். 19ஆம் தேதி விடுமுறை இல்லை என நிறுவனங்கள் கூறினால், 1950 என்ற எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

News April 15, 2024

பாமக இல்லை என்றால் அதிமுக அரசு கவிழ்ந்திருக்கும்

image

பாமக இல்லை என்றால் அதிமுக ஆட்சி இருந்திருக்காது என அன்புமணி விமர்சித்துள்ளார். வன்னியர் இட ஒதுக்கீடு தருவதற்கு சம்மதம் தெரிவித்ததால் மட்டுமே அதிமுக உடன் 2019இல் கூட்டணி சேர்ந்ததாக கூறிய அவர், கொடுத்த வாக்குறுதியை முறையாக இபிஎஸ் நிறைவேற்றவில்லை என்றார். மேலும் பேசிய அவர், வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கூட அதிமுக அரசு முறையாக இயற்றாமல் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

News April 15, 2024

ஷங்கர் மகளை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

image

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஐஸ்வர்யாவுக்கு 2022ல் கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணமான நிலையில், 6 மாதத்தில் அது விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில், இன்று மகளுக்கு இரண்டாவது திருமணத்தை அவர் நடத்தி வைத்துள்ளார்.

News April 15, 2024

சிஎஸ்கே வெற்றியால் பறிபோன ரோஹித் ஷர்மா சாதனை

image

ரோஹித் ஷர்மா இறுதி வரை களத்தில் இருந்து மும்பை அணி முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை 19 முறை இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரோஹித், 18 முறை மும்பை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். முதல் முறையாக நேற்று சிஎஸ்கேவுக்கு எதிராக சதமடித்தும் அவரால் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. முன்னதாக நேற்றைய போட்டியில் சதமடித்தும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை.

News April 15, 2024

BREAKING: தமிழகத்தில் வெப்ப அலை வீசும்

image

கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்த மக்களுக்கு ஒரு துயரமான செய்தியை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. ஆம்!, தமிழ்நாட்டில் வரும் வியாழக்கிழமை முதல் இனி வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் இந்த வாரம் 40 டிகிரி செல்சியஸ் வரையும், உள் தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ்-க்கு அதிகமாகவும் பதிவாகலாம்.

News April 15, 2024

சீமானுக்கு அது இருக்கு, கமலுக்கு இல்லையே

image

நாம் தமிழர் கட்சியை சீமான் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகி விட்டன. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் தோல்விகளை சந்தித்தும் தில்லாக போட்டியிடுகிறது. கமலின் மநீம தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. இந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. இதை கண்ட அரசியல் ஆர்வலர்கள், சீமான் தில்லாக போட்டியிடுகிறார், ஆனால் தில் இல்லாமல் கமல் பின்வாங்கி விட்டாரே என பேசுகின்றனர்.

error: Content is protected !!