News April 15, 2024

மின்தடையை ஏற்படுத்தி திமுக பணப்பட்டுவாடா

image

அதிகாலை வேளையில் மின்தடையை ஏற்படுத்தி, திமுக பணப்பட்டு வாடா செய்வதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், காலை 4 முதல் 6 மணி வரை மின்தடை செய்யப்படுவதாகவும், இதையடுத்து வீடு வீடாக ₹500, ₹1,000 பட்டுவாடா செய்யப்படுவதாகவும் விமர்சித்தார். பணத்தை அளித்து வாக்கு பெறும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

News April 15, 2024

ஷங்கர் மகள் திருமணத்தில் திரைப் பிரபலங்கள்

image

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

News April 15, 2024

ஆதார், லைசென்ஸ், வங்கி புத்தகத்தை எடுத்துட்டு போங்க

image

வாக்காளர் தகவல்சீட்டு வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும், வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், வங்கி புத்தகம், ஓட்டுநர் உரிமம், 100 நாள் வேலை திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை போன்றவற்றை அடையாள சான்றாக பயன்படுத்தலாம்.

News April 15, 2024

கெஜ்ரிவாலின் காவல் ஏப்.23 வரை நீட்டிப்பு

image

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்.23 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனிடையே, ED கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு ஏப்.29ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

News April 15, 2024

பறிமுதலில், ராஜஸ்தான் முதலிடம், தமிழகம் 3வது இடம்

image

தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், போதைப் பொருள் உள்ளிட்டவை அடிப்படையில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு ₹778 கோடி மதிப்புடைய ரொக்கம், போதை பொருள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. 2ஆவது இடத்தில் குஜராத் (₹605 கோடி), 3ஆவது இடத்தில் தமிழகம் (₹460 கோடி), 4ஆவது இடத்தில் மகாராஷ்டிரா (₹431 கோடி), 5ஆவது இடத்தில் பஞ்சாப் (₹311 கோடி) உள்ளன.

News April 15, 2024

மோடியை பார்க்கச் சென்ற இளைஞர் பலி

image

கேரளாவில் பிரதமர் மோடியை பார்க்க சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி நேற்றிரவு கொச்சி சென்றார். இந்நிலையில், வடுகலாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மோடியை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு, தடுப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிறு கழுத்தில் சிக்கி படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News April 15, 2024

ஆளுநர் அனுமதி கொடுத்தும் அமைதி காப்பது ஏன்?

image

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. குட்கா வழக்கில் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமாணா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்தும் 3 வருடங்களாக சிபிஐ அமைதி காத்து வருகிறது. ஒரு வழக்கின்
விசாரணையை முடிக்க இத்தனை ஆண்டுகள் தேவையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அடுத்த விசாரணையில் சிபிஐ பதிலளித்த உத்தரவிட்டார்.

News April 15, 2024

விளக்கம் கேட்கலாம், ஆனால் வழக்கு தொடர முடியாது

image

தேர்தல் விளம்பரம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரத்தை வெளியிட திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் ஆணையம், எங்களிடம் விளக்கம் கேட்கலாம், ஆனால், நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்துள்ளது.

News April 15, 2024

தேர்தலுக்காக வரைமுறையின்றி பாஜக பொய் சொல்கிறது

image

4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளதாக பாஜக கூறுவது அப்பட்டமான பொய் என காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இத்தனை கோடி வீடுகள் கட்டப்பட்டிருந்தால், ஒரு மாவட்டத்தில் 52 ஆயிரம் வீடுகள் கட்டி முடித்திருக்க வேண்டும். சிவகங்கை தொகுதியில் பாஜக கட்டிய அந்த 52 ஆயிரம் வீடுகள் எங்கே? என்று கேள்வி எழுப்பிய அவர், தேர்தலுக்காக பாஜக பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டினார்.

News April 15, 2024

நீட் தேர்வு மூலம் போலி மருத்துவர்கள்

image

போலி மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது என சீமான் குற்றம் சாட்டினார். காங்., கூட்டணி அரசு தான் ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தது. 5 மாநில தேர்தல் நடந்த போது 200 பொருட்களுக்கு GST வரியை பாஜக அரசு குறைத்தது என விமர்சித்த அவர், இங்கு கட்சி அரசியலும், தேர்தல் அரசியலும் தான் இருக்கிறது. மக்கள் அரசியல் இல்லை. ஆட்டை பலி கொடுப்பதுக்கு முன் இரை கொடுப்பது போல விலையை குறைக்கிறார்கள் என சாடினார்.

error: Content is protected !!