India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சனாதன தர்மத்தின் மீது திமுக வெறுப்பை விதைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ANI ஊடகத்திற்குப் பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு மீது மக்களுக்கு அபரிமிதமான கோபம் இருப்பதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் தற்போது பாஜக நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அண்ணாமலை சிறப்பாகச் செயல்படுகிறார். ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு அவர் பாஜகவில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
‘தங்கலான்’ படத்தையடுத்து ‘சித்தா’ படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் ப்ரமோ வீடியோ விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (ஏப்ரல் 17) வெளியாகும் என கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 2 நாள்களில் அப்டேட் வர உள்ளதாக நடிகர் விக்ரம் ட்வீட் செய்துள்ளார்.
ஜூன் 4ஆம் தேதிக்குப் பின் தமிழ்நாட்டில் உதய சூரியன் மறைந்து போகும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லை பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தற்போது நெல்லைக்கு மோடி வருகை தந்த காரணத்தால் சூரியன் அஸ்தமித்துள்ளது. இதேபோல் ஜூன் 4க்குப் பின் உதய சூரியன் மறைந்து போகும் என திமுகவைத் தாக்கியுள்ளார். மேலும், ஜூன் 4 ஆம் தேதி 400க்கும் மேற்பட்ட எம்பிக்கள் மோடியின் காலடியில் இருப்பார்கள் என்றார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற RCB கேப்டன் டு ப்ளஸி பவுலிங் தேர்வு செய்துள்ளார். நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள RCB ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதே நேரம் SRH அணி 3 வெற்றிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுவதால் RCB வெற்றிக்காக கடுமையாக போராடும். இன்று எந்த அணி வெற்றிபெறும்?
எஸ்பிஐ வங்கி வழங்கிவரும் ‘அம்ரித் கலாஷ்’ என்ற சிறப்புத் திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 400 நாட்கள் fixed deposit செய்து கொள்ளலாம். அதற்கு 7.10% வட்டி (ஆண்டுக்கு) வழங்கப்படும். மூத்த குடிமக்கள் இத்திட்டத்தின்கீழ் 0.50% அதிகமாக 7.60% வட்டி பெறுவார்கள். இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.
அமலாக்கத்துறை சிறப்பாக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ANI ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக சிறைக்கு அனுப்புவதாகக் கூறப்படுவதை மறுத்தார். நேர்மையானவர்கள் பயப்படத் தேவையில்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது எனது உள்துறை அமைச்சரை சிறைக்கு அனுப்பினார்கள். அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 3% மட்டுமே அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் என்றார்.
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ₹20,000 கோடி முதல் ₹25,000 கோடி வரையிலான பசுமைப் பத்திரங்களை வெளியிட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்திய அரசின் பத்திரங்கள் மீது உலக முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல் அரையாண்டில் பசுமைப் பத்திரங்கள் மூலம் ₹12,000 கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ஆண்டு இறுதியில் ₹25,000 கோடி வரை இருக்கலாம்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கடைசி நாள் பிரசாரத்தன்று கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கோடை வெயிலை கருத்தில் கொண்டு கடைசி நாளன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ, இல்லையோ போதைப்பொருள் தாராளமாக கிடைப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசுக்கு திறமையில்லை. அரசு ஊழியர்களுக்கு நாமம் போட்ட கட்சி திமுக எனவும் சாடினார்.
பாஜக ஆட்சியிலிருந்து துடைத்தெறியப்படும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியா கூட்டணிக்கு விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அமோக ஆதரவு அளித்து வருவதாகத் தெரிவித்தார். கொள்ளை அடிப்பதும், பொய் சொல்வதும்தான் பாஜக அரசின் கொள்கை. இதைத் தவிர அவர்களிடம் வேறு எந்த அடையாளமும் இல்லை எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.