News May 29, 2024

வாகன ஓட்டிகள் குழப்பம்

image

வாகன ஓட்டிகள் புதிதாக லைசன்ஸ் பெறுவதற்கு RTO அலுவலகம் செல்லத் தேவையில்லை என்ற விதியை மத்திய அரசு ஜூன் 1 முதல் அமல்படுத்துகிறது. டிரைவிங் ஸ்கூல் சான்றிதழ் அளித்தாலே லைசன்ஸ் வீடுதேடி வரும் என்ற நடைமுறையை பின்பற்றவுள்ளது. ஆனால், இது தொடர்பான எந்த அறிவிப்பும் தமிழக அரசிடம் இருந்து வெளியாகவில்லை. இப்படியான, இருவேறு முடிவுகளால் RTO சேவையை பயன்படுத்துவோர் குழப்பத்தில் உள்ளனர்.

News May 29, 2024

நோட்டு புத்தகம் விலை 20% குறைவு

image

பேப்பர் விலை வெகுவாக குறைந்ததால் நோட்டு புத்தகங்களின் விலை 20% வரை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த ஆண்டு ₹1.15 லட்சமாக இருந்த ஒரு டன் பேப்பர் விலை, இந்த ஆண்டு ₹85ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால், நோட்டு புத்தகங்களின் விலையும் குறையும் என கூறப்படுகிறது.

News May 29, 2024

டி20 WC: அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள்

image

டி20 உலக கோப்பையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவே அதிகபட்சமாக 39 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதற்கடுத்து, வங்கதேச வீரர் ஷகீப் அல் ஹாசன் 36 போட்டிகளிலும், இலங்கை முன்னாள் வீரர் தில்ஷன் 35 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ, பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி, சோயிப் மாலிக், ஆஸ்திரேலியாவின் வார்னர் 34 போட்டிகளில் விளையாடியுள்ளனர். கோலி 27 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

News May 29, 2024

அரசியலில் பல்டி அடிப்பது அதிமுகவினருக்கு சகஜம்

image

அரசியலில் பல்டி அடிப்பது அதிமுகவினருக்கு மிகவும் சகஜம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அதிமுகவினர் தற்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பார்கள். தேர்தல் முடிவு வந்தபிறகு பாஜகவுடன் கூட்டணி என்பார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவினர் திசை தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

News May 29, 2024

பிற நடிகர்களின் படங்களில் நடிக்க ராமராஜன் முடிவு

image

நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என ராமராஜன் உறுதியாக இருந்ததால், ஏராளமான பட வாய்ப்புகளை இழந்ததாகக் கூறப்படுவதுண்டு. அண்மையில் ராமராஜன் நடிப்பில் வெளியான சாமானியன் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததை பார்த்த ராமராஜன், இனி பெரிய நடிகர்களின் படங்களில் தனக்கு உரிய கதாபாத்திரம் கிடைக்கும்பட்சத்தில், அதை மறுக்காமல் ஏற்று நடிப்பதென முடிவு செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

News May 29, 2024

ஜூன் 1ஆம் தேதி மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள்

image

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் 6.30 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன. அனைத்து முன்னணி நிறுவனங்களின் கருத்துக் கணிப்பையும் நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள Way2Newsஉடன் இணைந்திருங்கள்.

News May 29, 2024

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்தவர்கள்

image

▶மேத்யூ ஹைடன் – 265 (2007) ▶தில்ஷன் – 317 (2009) ▶ஜெயவர்த்தனே – 302 (2010) ▶ஷேன் வாட்சன் – 249 (2012) ▶விராட் கோலி – 319 (2014) ▶தமீம் இக்பால் – 295 (2016) ▶பாபர் அசாம் – 303 (2021) ▶விராட் கோலி – 296 (2022). நடந்து முடிந்த 8 டி20 உலகக் கோப்பைத் தொடர்களில், இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 309 ரன்களும், 2 முறை அதிக ரன்களையும் குவித்துள்ளார்.

News May 29, 2024

ரஃபா தாக்குதல்: த்ரிஷா, ரஷ்மிகா இன்ஸ்டாவில் பதிவு

image

இஸ்ரேல் தாக்குதலில் ரஃபாவில் உள்ள பொதுமக்கள் முகாம் எரிந்து, குழந்தைகள் உள்பட 45 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் இணையத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகைகள் த்ரிஷா, ரஷ்மிகாவும் தங்களின் இன்ஸ்டாகிராமில் ‘All Eyes On RAFAH’ என பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் ரஃபா மீதான தாக்குதலை அனைவரும் கவனிக்கின்றனர் என்பது தெரிகிறது.

News May 29, 2024

இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழ்நாடு

image

முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில், இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட், சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு ஆகிய போட்டிகள் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

News May 29, 2024

பாஜகவில் உள்ள குழப்பத்தை திசை திருப்பும் அண்ணாமலை?

image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத் தலைவர் என அண்ணாமலை திடீரென கூற 2 காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒன்று, அதிமுகவில் உள்ள இந்துசார்பு தலைவர்கள், வாக்குகளை பாஜக பக்கம் கொண்டு வருவதற்காக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இரண்டாவதாக, தேர்தலைத் தொடர்ந்து தமிழக பாஜகவில் நிலவும் குழப்பங்களை திசை திருப்புவதற்காக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

error: Content is protected !!