India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி, ரஃபா நகரின் மையப் பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருவதால், அப்பகுதி மக்கள் வெளியேறி வருகின்றனர். நேற்று முன்தினம், ரஃபாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் ராணுவம் தீவிரத் தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக, கிடைக்கும் வாகனங்களில் ஏறி பாலஸ்தீனர்கள் அங்கிருந்து
வெளியேறி வருகின்றனர்.
மே 31ஆம் தேதி மீண்டும் சினிமா காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள 4000 திரைகளில் ₹99 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற பிரபல திரையரங்குகள் பங்கேற்கின்றன. திரைப்படக் காதலர்களுக்கு இந்த சலுகை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் 1ஆம் தேதி பருவமழை தொடங்கவிருப்பதால் அதன் தாக்கம் தமிழகத்தில் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச்சில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி தோல்வியடையும், இத்தோல்விக்கு EVM மீது பழிபோட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
சீன ஆய்வாளர்கள் புதிதாக ஒரு செயற்கை வைரஸை உருவாக்கியுள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் பல ஆயிரம் மக்களைக் கொன்ற எபோலா வைரஸ் குறித்து ஆய்வு செய்வதற்காக அதைப் போன்றே செயற்கை வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்தபோது, இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி ஆகியவற்றை பாதித்து மூன்று நாட்களில் மரணத்தை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. ஆனால், இவை வெளியே பரவாது என்பது சற்று நிம்மதியான விஷயம்.
பிஹாரில் நிதிஷ் குமாரின் பேச்சுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பிஹாரில் அரசோ, ஜனநாயகமோ இல்லை, அரசு அதிகாரிகள் ஆதிக்கமே உள்ளது என்றார். பிஹாரில் வெயில் வாட்டி எடுப்பதால், பள்ளிக்குழந்தைகள் கடும் துயரத்தில் உள்ளதாகவும், அவர்களுக்காக நேரத்தை தளர்த்தலாம், ஆனால் நிதிஷ் கையில் எதுவுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நமீபியாவுக்கு எதிரான உலகக் கோப்பைப் பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற காரணத்தால், சில ஆஸி., வீரர்கள் ஓய்வெடுக்க சென்று விட்டனர். இதனால் இன்றைய போட்டியில், 9 வீரர்கள் மட்டுமே விளையாடும் நிலையில் இருந்தனர். அணியில் ஆள் இல்லாத காரணத்தால், தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி ஆகியோர் மாற்று வீரர்களாக ஃபீல்டிங் செய்தனர்.
வைகோவுக்கு தோள் பட்டை அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்ததாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், 3 இடங்களில் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். அத்துடன், தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரம் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளதால், தொண்டர்கள், நலம் விரும்பிகள் அவரை சந்திக்க வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
புகார் அளிக்க காவல்நிலையம் செல்ல சிலருக்கு தயக்கமாக இருக்கும். அவர்களுக்காக ஆன்லைனில் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, உங்களது பெயர், செல்போன் எண்ணை பதிவிட வேண்டும். பிறகு செல்போன் எண்ணிற்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு, உங்கள் புகாரை பதிவு செய்யலாம். பிறகு உங்கள் புகார் மீதான விசாரணை நிலவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரான சர்ச்சைக்குரிய பிரிஜ்பூஷண் சிங்கின் மகன் கரண் பூஷண் சிங் போட்டியிடுகிறார். கோண்டாவில் அவர் அணிவகுப்பின்போது அணிவகுப்பு வாகனம் பைக்கில் சென்ற 2 பேர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பலியாகினர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.