News April 16, 2024

இறுதி கட்ட பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின்

image

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் வாக்கு சேகரிக்க உள்ளார். வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜிகேஎம் காலணி பகுதியில் பரப்புரை செய்கிறார். அதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

News April 16, 2024

IPL: அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்

image

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் 255 போட்டிகளில் 5,121 ரன்களுடன் CSK அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் தோனி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக உள்ள 4 வீரர்களின் விவரம் பின்வருமாறு: தினேஷ் கார்த்திக் – 4,659 ரன்கள் (248), குயின்டன் டி காக் – 3,071 ரன்கள் (101), ரிஷப் பந்த் – 3,032 ரன்கள் (104), ராபின் உத்தப்பா – 3,011 ரன்கள் (114).

News April 16, 2024

நவகிரகங்களை எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்?

image

நவகிரகங்களைச் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரிய எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் 9 முறை சுற்றி வணங்கி பின் அந்த கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றிவந்து வழிபட வேண்டும். சூரியன் 10, சுக்கிரன் 6, சந்திரன் 11, சனி 8, செவ்வாய் 9, ராகு 4, புதன் 5, கேது 9, வியாழன் 21 என்ற தனி எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும் என நவகிரக தாந்த்ரீக பரிகாரம் கூறுகிறது.

News April 16, 2024

சிதம்பரத்தை குறிவைத்துள்ள பாஜக

image

ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட சங் பரிவாரக் கும்பல்கள் சிதம்பரம் தொகுதியை குறிவைத்து வேலை செய்து வருவதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். காட்டுமன்னார்கோவிலில் பேசிய அவர், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குரல் கொடுப்பவர் திருமாவளவன். அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என சிலர் கங்கணம் கட்டியுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க எண்ணுவோர் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

News April 16, 2024

புத்தரின் பொன்மொழிகள்

image

✍நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்துவிட்டால், நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். ✍பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான். ✍மனநிம்மதிக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன; ஒன்று விட்டு கொடுப்பது இல்லையெனில் விட்டு விலகுவது. ✍அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான். ✍உங்கள் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் நீங்களே காரணம்.

News April 16, 2024

‘தளபதி69’ படத்தின் இயக்குநரை தெரியும்

image

விஜய்யின் ‘தளபதி69’ ஐ எந்த இயக்குநர் இயக்கவுள்ள யாரென தெரியும்; ஆனால் இப்போது சொல்ல மாட்டேன் என்று The G.O.A.T பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், தளபதி69-ஐ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் எனக் கூறினார். அரசியலுக்கு செல்லும் விஜய்யின் கடைசியாக நடிக்கவுள்ள படம் என்பதால் தளபதி69 மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News April 16, 2024

பாஜகவுக்காக பகல் வேஷம் போடும் பழனிசாமி

image

மக்களவைத் தேர்தலுக்காக பாஜக எழுதிக் கொடுத்த பாத்திரத்தில் இபிஎஸ் அருமையாக நடிக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது அவரது சொந்த முடிவு இல்லை. அது பாஜகவின் உத்தரவு. இப்போது அந்தக் கட்சியின் பி-டீமாக அதிமுக இருக்கிறது. பழனிசாமியின் பகல் வேஷம் மக்களிடம் எடுபடப் போவதில்லை என்றார்.

News April 16, 2024

விடுமுறை பயணம்: விமான கட்டணம் கடும் உயர்வு

image

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயண கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹4,700ஆக இருந்த கட்டணம் ₹7,000 ஆக உயா்த்தி வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவுக்கு ₹9,000ஆகவும், கொச்சிக்கு ₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஸ்ரீநகருக்கு ₹17,000 ஆகவும், போர்ட் பிளேயருக்கு ₹10,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

News April 16, 2024

இயன்றவரை இலக்கை நெருங்க முயற்சித்தோம்

image

SRH அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த பேட்டிங் செயல்திறனை RCB வீரர்கள் வெளிப்படுத்தியதாக அந்த அணியின் கேப்டன் டூப்ளசி தெரிவித்துள்ளார். தோல்வி குறித்து பேசிய அவர், 280 ரன்களை எட்டுவது கடினமானது என்றாலும் இயன்றவரை இலக்கை நெருங்கி செல்ல முயற்சித்தோம். 30-40 ரன்களை கூடுதலாக கொடுத்துவிட்டோம். பேட்டிங்கிலும் வேகப்பந்து வீச்சிலும் சில இடங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது எனக் கூறினார்.

News April 16, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஏப்ரல் – 16 | ▶ சித்திரை – 03
▶கிழமை: செவ்வாய் | ▶திதி: அஷ்டமி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 05:15 – 06:00 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை
▶ராகு காலம்: காலை 03:00 – 04:30 வரை
▶எமகண்டம்: காலை 09:00 – 10:30 வரை
▶குளிகை: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶சந்திராஷ்டமம்: அனுஷம்
▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

error: Content is protected !!