News May 30, 2024

பிரதமர் மோடி இன்று தியானம் செய்கிறார்

image

மக்களவைத் தேர்தல் விரைவில் முடியவில்ல நிலையில், இன்று கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தொடர்ந்து 3 நாள்கள் தியானம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலமாக மாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். தியானத்தை முடித்துவிட்டு ஜூன் 1ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

News May 30, 2024

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி தோல்வி

image

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சாத்விக் ரெட்டி – சிராக் ஷெட்டி அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளனர். இவர்கள் தரவரிசையில் 34வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் லண்ட்கார்ட்- மேட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியை எதிர்கொண்டு விளையாடி, 20-22, 18-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தனர். இதேபோல் ஒற்றையர் பிரிவில் பிரியன் ஷூ ரஜாவத், ஆகர்ஷி காஷ்யப்பும் தோல்வியடைந்தனர்.

News May 30, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

* உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான். -மாவீரன் நெப்போலியன்
* முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல், புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல் -ஜார்ஜ் பெர்னாட்ஷா
* நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அதை உன்னில் இருந்தே தொடங்கு. – காந்தி
* இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை. – கன்பூசியஸ்

News May 30, 2024

சேனல் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

image

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்பாக கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் டிவி சேனல்களுக்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறி ஒடிசாவில் தேர்தலுக்கு முன்பாக கருத்துக் கணிப்பு வெளியிட்ட டிவி சேனல் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News May 30, 2024

வாகனங்களின் விற்பனை உயர்வு

image

இந்தியாவில் வாகனங்களின் சில்லறை விற்பனை 2022 -2023 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2023 -2-24ஆம் நிதியாண்டில் 10% உயர்ந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 2,22,41,361 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 2,45,30,334 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மக்களிடையே வாகனங்கள் பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

News May 30, 2024

திருமணம் குறித்து வதந்தி.. நடிகை மஞ்சிமா வருத்தம்

image

நடிகை மஞ்சிமா மோகன், நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், திருமணத்தில் எனது மாமனார் கார்த்திக்கிற்கு விருப்பம் இல்லை, கவுதமிற்கு நான் ஏற்ற ஜோடியில் என்றெல்லாம் வதந்தி பரப்புகின்றனர் என மஞ்சிமா வேதனை தெரிவித்துள்ளார். மேலும், முன்பு இதெற்கெல்லாம் வருத்தமடைந்ததில்லை. ஆனால், திருமணத்திற்குப் பின் ஒருகட்டத்தில் வருத்தமடைந்தேன் எனக் கூறியுள்ளார்.

News May 30, 2024

வரலாற்றில் இன்று: மே 30

image

* 1913 – லண்டன் உடன்பாடு எட்டப்பட்டு முதலாம் பால்கன் போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடானது.
* 1914 – அக்காலத்தின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் அக்குவித்தானியா தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து நியூயார்க் நகரம் நோக்கி ஆரம்பித்தது.
* 1975 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
* 1987 – கோவா இந்தியாவின் தனி மாநிலமாகியது. * 2013 – நைஜீரியாவில் ஒருபால் திருமணம் தடை செய்யப்பட்டது.

News May 30, 2024

ஜாபர் சாதிக்கின் நீதிமன்றத் காவல் நீட்டித்து

image

வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்றத் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்து டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்குப் பின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

News May 30, 2024

T20 WC: இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள்

image

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 2 முதல் தொடங்க உள்ள நிலையில், இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகளை முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதன்படி, பிரையன் லாரா – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ். சுனில் கவாஸ்கர்- இந்தியா, ஆஸ்திரேலியா. மேத்யூ ஹைடன்- இந்தியா, ஆஸ்திரேலியா. கிறிஸ் மோரிஸ்- இந்தியா, தென் ஆப்பிரிக்கா. பால் காலிங்வுட்- இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என கணித்துள்ளனர். உங்கள் கணிப்பு என்ன?

News May 30, 2024

ஒரு மாதத்தில் 72 பட்டாசு ஆலைகள் உரிமம் ரத்து

image

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், இந்த ஆண்டில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 72 ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. மத்திய வெடிபொருள் கட்டுப்பட்டு துறையின் அனுமதி பெற்று இயங்கிய 33 ஆலைகள், மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி பெற்று இயங்கிய 39 ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!