India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகில் உள்ள நீர்நிலைகள் தொடங்கி செல்வ வைப்பிடங்கள் வரை அனைத்தையும் காக்க சிவபெருமானால் படைக்கப்பட்ட காவல் தெய்வம்தான் க்ஷேத்ரபாலர். சோழர்கள் காலத்தில் க்ஷேத்ரபாலர் வழிபாடு உச்சத்தில் இருந்தபோது, குடந்தை திருநல்லகூகூரில் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயிலில் அவருக்கென தனி சந்நிதி எழுப்பப்பட்டது. தீராத பிணிகளால் வாடுவோர் இங்கு வந்து பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபட்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரம்- திருப்பதி ரயில் சேவை ஜுன் 1 முதல் 30 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும், அந்த ரயில் காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இனி காட்பாடியில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் என தென்மத்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை முற்றிலும் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். தற்போது மின்சாரத்தில் இயங்கும் பைக், கார்கள் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், பாஜக ஆட்சியில் சாலைப் போக்குவரத்தில் பல பிரமாண்டமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். மேலும், ₹100க்கு பெட்ரோல் போடுவதை விடவும், ₹4 செலவில் மின்சார வாகனங்களை இயக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அதிவேகமாக பைக்கில் சென்று விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்போனில் பேசியபடியே கார் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், மதுரை அண்ணாநகர் போலீசார் வாசனை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிகிறது.
* RTE சட்டத்தின் கீழ் ஜூன் 3க்குள் 25% மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவு.
* பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இன்று முதல் 3 நாள்கள் தியானம் செய்கிறார்.
* கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
* இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது – தமிழக அரசு
டீ சூடான பின்பும் நீண்ட நேரம் கொதிக்க விடுவதால் பாலின் Ph மதிப்பானது மிகவும் கடினமாக மாறுகின்றது. இதன் காரணமாக நெஞ்செரிச்சல், வயிற்றுவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், அதிக அளவில் கொதிக்கவைப்பதன் காரணமாக பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடுவதுடன், அக்ரிலாமைடு எனும் கார்போஹைட்ரேட் உருவாகி அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. ஏற்கெனவே 3 போட்டிகள் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கி., வெற்றிபெற்றது. மற்ற இரு போட்டிகளும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இன்றைய போட்டியில் வெல்லும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலை ஒவ்வொரு நகரத்திலும் ஒரு மாதிரி இருந்தாலும், மாசுபாடு போன்றவை கூட வெப்பநிலையை தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது. நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தும் உபகரணங்களும் வெப்பநிலையைத் தீர்மானிக்கின்றன. பெருநகரங்களில் வணிக வளாகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஏசிக்கள் கூட அந்தப் பகுதியின் வெப்பநிலையை அதிகரிக்கிறது.
ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கடைசிக் காட்டாத தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. ஏழாவது கட்டமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட உத்தர பிரதேசம், பிஹார், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
▶மே – 29 ▶வைகாசி – 16 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM வரை ▶கெளரி நல்ல நேரம்: 12:00 AM – 01:00 AM வரை, 6:30 PM – 7:30 PM வரை ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM வரை ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM வரை ▶குளிகை: 9:00 AM – 10:30 AM வரை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ திதி: அஷ்டமி ▶ பிறை: தேய்பிறை
Sorry, no posts matched your criteria.