News April 16, 2024

அதிக பயணிகளை கையாண்ட பெங்களூரு விமான நிலையம்!

image

2023-24ஆம் நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாண்ட விமான நிலையங்களில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. ஓராண்டில் 3 கோடியே 75 லட்சம் விமான பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதில் 46.70 லட்சம் பேர் வெளிநாட்டு பயணிகள் ஆவர். மேலும், 4 லட்சத்து 39 ஆயிரத்து 524 மெட்ரிக் டன் சரக்குகளை பெங்களூரு சர்வதேச விமான நிலையம் கையாண்டுள்ளது.

News April 16, 2024

இந்த ராசிகளுக்கு பணமழை கொட்டப் போகிறது

image

ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்கள், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறி சஞ்சரிக்கும். அதன்படி, சூரிய பகவான் தற்போது கும்ப ராசியில் நுழைந்துள்ளார். இதனால் கடகம், துலாம், மகரம், கும்பம் ராசியினர் பணத்தில் புரளப் போகின்றனர். சொத்துகள் வாங்கும் யோகம், வியாபாரத்தில் லாபம், உழைப்புக்கேற்ற ஊதியம் போன்ற சுப நிகழ்வுகளை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.

News April 16, 2024

வாய்ஜாலம் பேசுபவர்களிடம் மயங்கி விடாதீர்

image

வாய்ஜாலம் பேசுபவர்களிடம் மக்கள் மயங்கிவிடக் கூடாது என கமல்ஹாசன் கூறியுள்ளார். கோவை பிரசாரத்தில் பேசிய அவர், 80 ஆண்டுகளுக்கு முன் காந்தி, காமராஜர் பின்னால் தனது தந்தை எதற்காக சென்றாரோ அதே காரணத்திற்காக தற்போது நானும் புறப்பட்டிருக்கிறேன் என்றார். மேலும், தமிழகத்தில் இருப்பதைப் போல பிற மாநிலங்களில் தேடிப் பார்த்தாலும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்ற வசதிகள் இருக்காது எனத் தெரிவித்தார்.

News April 16, 2024

பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு

image

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோஸ்ட்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இந்த வீரதீர செயலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். நக்சலிஸம் நாட்டின் தடையாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர், விரைவில் நமது நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

News April 16, 2024

மாநிலங்களவை சீட் கேட்போம்

image

இந்த முறை தேமுதிகவுக்கு உறுதியாக ஒரு மாநிலங்களவை சீட் கேட்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சீட் கேட்பது எங்களது உரிமை. அதைத் தர வேண்டியது கூட்டணிக் கட்சியின் தர்மம் எனப் பேசிய அவர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், அங்கு வாடகைக்கு வீடு பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும், இந்த முறை அவருக்கே வாய்ப்பு தருவோம் என மக்கள் உறுதியாக கூறியுள்ளதாகவும் பிரேமலதா கூறியுள்ளார்.

News April 16, 2024

கனமழை வெள்ளத்தால் 39 பேர் பலி

image

பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

News April 16, 2024

அதிமுக அழுத்தம் அளித்ததால் தான் ₹1,000 வந்தது

image

அதிமுக அழுத்தம் கொடுத்ததால் தான் மகளிருக்கு ₹1,000 உரிமைத்தொகையை திமுக அரசு அளித்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், சட்டமன்றத்தில் தொடர்ந்து 3 முறை அனைத்து மகளிருக்கும் ₹1,000 உரிமைத்தொகை வழங்க வலியுறுத்தியதாகவும், தேர்தலுக்கு முன்னர் அனைவருக்கும் என கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்களுக்கு பிறகு தகுதி அடிப்படையில் ₹1,000 வழங்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

News April 16, 2024

அங்கு ஒருவர் பிறந்தால், இருவர் இறக்கின்றனர்!

image

கிரேக்க நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. அங்கு தினமும் ஒருவர் பிறந்தால், 2 பேர் இறக்கின்றனர். 2011 இல் 1.14 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 1.07 கோடியாக உள்ளது. 2050 இல் அங்கு மக்கள் தொகை 90 லட்சம் ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைப் பெற்றுக் கொள்ள அரசு பல சலுகைகளை அளித்தாலும், அந்நாட்டு இளைஞர்கள் திருமணத்தில் ஆர்வமின்றி இருக்கின்றனர்.

News April 16, 2024

ஜூன் 7ல் INDIA கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிப்போம்

image

INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஜூன் 7ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை பிரசாரத்தில் பேசிய அவர், பாஜகவும், அதிமுகவும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதால் 2 கட்சிகளுக்கும் வாக்களிப்பது ஒன்றுதான் என விமர்சித்தார். மேலும், அதிமுகவில் ஆள் கிடைக்காததால் தான் மதுரை வேட்பாளராக சரவணன் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

News April 16, 2024

ஹாட்ரிக் விக்கெட் + 100 ரன்கள் எடுத்த நரைன்

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சத்தம் அடித்த சுனில் நரைன் ஐபிஎல்லில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஹாட்ரிக் விக்கெட் + 100 ரன்கள் எடுத்த முன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக ரோஹித் ஷர்மா, வாட்சன் இந்த சாதனையை படைத்துள்ளனர். 2009இல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ரோஹித், மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

error: Content is protected !!