India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் ராமரின் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் ராவ நவமியாக கொண்டாடப்படுகிறது. திரேதா யுகத்தில் சைத்ர சுக்ல நவமி அன்று ராமர் பிறந்தார். ராமரின் முன்னோர்கள் சூரியக்குல வழித்தோன்றல்கள் என்பதால் சூரியனை வழிபடுவதில் இருந்து ராம நவமி கொண்டாட்டம் தொடங்குகிறது. ராவ நவமியை ஒட்டி, அயோத்தியில் உள்ள பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் ஏற்றப்படவுள்ளது.
KKR – RR இடையிலான போட்டி நரேன் vs பட்லர் என மாறியது. நரேன் 56 பந்துகளில் 6 சிக்ஸ், 14 பவுண்டரிகளுடன் 109 குவித்து அணியின் ஸ்கோரை 223ஆக மாற்றினார். இந்த இலக்கை RR வீரர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என சந்தேகம் எழுந்தது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் பராக் ஜூரேல் என முக்கிய வீரர்கள் கைவிட்ட போதும் பட்லர் தனிய ஆளாக 60 பந்துகளில் 6 சிக்ஸ், 9 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற செய்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து உத்தரவு பிறப்பிக்கப்பட இருந்தது. இதனிடையே, மீண்டும் வாதங்களை முன்வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கடைசி வரை போராடி மகத்தான வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்வது இது 2ஆவது முறை ஆகும். 2020இல் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி 226 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன் சேஸ் ஆகும்.
உ.பி.,யின் காசியாபாத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று கூட்டாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். உ.பி.,யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. I.N.D.I.A கூட்டணியின் முக்கிய தலைவர்கள் இருவரும் கூட்டாக பிரசாரம் செய்வது மேற்கு உ.பி.யில் உள்ள 13 தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துமென காங்கிரஸ் நம்புகிறது.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக – ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.சிவகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். பாஜக உடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இதற்கிடையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்.19) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, கடந்த 4 வாரங்களாக நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டியில் வெல்வது யாரென்பது ஜூன் 4இல் தெரியும்.
டெல்லி – குஜராத் அணிகளுக்கு இடையேயான 32ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 6 போட்டிகளில் டெல்லி அணி ஒரு போட்டியிலும், குஜராத் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் GT- 6 மற்றும் DC- 9ஆவது இடங்களில் உள்ளன. இளம் கேப்டன்களை கொண்ட இரு அணிகளும் மோதவுள்ளதால், போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும். யார் வெற்றி பெறுவார்?
தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமுறைகள் அமலுக்கு வரும். ஏப்ரல் 19ஆம் தேதி மாலை வாக்குப்பதிவு நடந்து முடியும் வரை திரைப்படம், வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ் போன்ற சாதனங்கள் வாயிலாகவோ இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, கேளிக்கை நிகழ்ச்சி மூலமாகவோ யாரும் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது. இந்த விதிமுறையை மீறிபவர்களுக்கு சட்டப்படி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ₹5,000 கிடைக்கும் வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ₹1,000, பெண்களுக்கு இலவச பேருந்து மூலம் மாதம் ₹2,000 மிச்சமாவதாகவும், முதியோர் உதவித்தொகை ₹1,200, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உங்களுக்கும் இத்தொகை கிடைக்கிறதா?
Sorry, no posts matched your criteria.